காமராசர் நினைவு நாள் (2.10.2023) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 2, 2023

காமராசர் நினைவு நாள் (2.10.2023)

பச்சைத் தமிழர், கல்வி வள்ளல் காமரா சரை, தந்தை பெரியார் வற்புறுத்தி முதலமைச்சர் பதவியேற்க வைத்தார். அதற்குமுன் பல முதல மைச்சர்களை உருவாக் கியவர் காமராசர். அவரை முதலமைச்சராக அமர முழு ஒத்துழைப்பு, உறுதி கூறி, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், சமூகப் புரட்சிக்கும் வழிவகுத்தார் தந்தை பெரியார்!

காமராசரின் சமதர்ம ஆட்சியைக் கண்டு  - பசுவதைத் தடுப்பு என்ற சாக்கில் - நிர்வாண சாமியார்கள், சாதுக்கள் என்ற பெயரில், அவரைக் கொலை செய்யவும், அவரது புதுடில்லி வீட்டிற்குத் தீ வைக்கவும் மதவெறியர்கள் செய்த முயற்சியையும் தாண்டி வரலாறு படைத்த தொழிற்புரட்சிக்கு வித்திட்ட காமராசரின் நினைவைப் போற்றுவோம்!

கலைஞர், காமராசரின் பிறந்த நாளை 'கல்வி நாளாகக்' கொண்டாட தனிச் சட்டமே இயற்றி, அரசியல் மாச்சரியங்களைத் தாண்டினார்;  முன்பே காமராசருக்கு சரியாக நினைவுச் சின்னம் ஏற் படுத்தினார்!

கல்வி வள்ளல் காமராசர் என்றும் வழிகாட்டும் கலங்கரை வெளிச்சம்!

No comments:

Post a Comment