தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் - 2023 விழா! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் - 2023 விழா! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

சென்னை, அக்.11- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் பல்கலைக் கழகத்தின் இணை வேந்தருமான மா.சுப்பிரமணியன் தலை மையில்  தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல் கலைக்கழக வெள்ளி விழா கலைய ரங் கத்தில் ‘பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் - 2023’ விழா 09.10.2023 அன்று  சிறப்புடன்   நடைபெற்றது.

இளநிலை மருத்துவ மாண வர்களின் ஆராய்ச்சித் திறனை ஊக்கப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வர லாற்றில் முதன் முறையாக,  ‘பல் கலைக்கழக ஆராய்ச்சி நாள் 2023’ கடந்த 26.09.2023 அன்று நடத்தப் பட்டது.

இதனை முன்னிட்டு, இப்பல் கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள 60க்கும் மேற்பட்ட மருத் துவக் கல்லூரி மாணவர்களுக்கு  நடத்தப்பட்ட பல்வேறு போட் டிகளில் வெற்றி  பெற்ற 64 மாண வர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும், ஆராய்ச்சி நாளை முன்னிட்டு சிறந்த முறை யில் ஆய்வுக் கட்டுரைகள்  சமர் பித்த மூன்று மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள், மூன்று முதுநிலை மருத்துவ மாணவர்கள் மற்றும் மூன்று இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆராய்ச்சி விருதினையும், பாராட்டுச் சான்றிதழையும்  மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தருமான மா.சுப்பிரமணியன் வழங்கி சிறப்பித்தார். 

மேலும், பல்கலைக்கழக ஆராய்ச்சி நாளினை முன்னிட்டு, இளநிலை மருத்துவ மாணவர் களால் சமர்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளில், சிறந்த 50 கட்டுரைகளை உள் ளடக்கிய தொகுப்பான “அறிவேள்வி” என்னும் நூலினை யும் அமைச்சர் வெளியிட்டார். 

மேலும் “மேம்படுத்தப்பட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆய்வு இதழையும்” அமைச்சர் விழாவில் வெளியிட்டுச் சிறப்பித்தார்.

மேலும், கடந்த ஆண்டு நடை பெற்ற இளநிலை, முது நிலை மருத்துவம் மற்றும்  மருத் துவம் சார்ந்த பல்வேறு தேர்வுக ளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நன்கொடையா ளர்கள் சார்பிலான 88 தங்கப் பதக்கங்களும், 29 வெள்ளிப் பதக் கங்களும், இப்பல்கலைக் கழகத்தின் சார்பில் 55 வெள்ளிப் பதக்கங்களும், 37 பரிசுகள், சான்றிதழ்கள் ஆக மொத்தம் 209 பதக்கங்களையும் விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்ச ரும் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான மா.சுப்பிரமணி யன் வழங்கி சிறப்பித்தார்.

அமைச்சர் தமது தலைமை உரையில், இப்பல்கலைக்கழக வரலாற்றில்  முதன்முறையாக இள நிலை  பயிலும் மருத்துவ மாணவர் களின் ஆராய்ச்சித் திறனை ஊக்குவிக்கின்ற வகை யில் “பல் கலைக்கழக ஆராய்ச்சி நாள்” பல்கலைக்கழக ஆராய்ச்சி நாளை இப்பபல்கலைக் கழகம் முன்னெ டுத்து  இருப்பதன்  நோக்கமே: 

மருத்துவ மாணவர்களி டையே ஆக்கப்பூர்வமான சிந் தனைகளை  வளர்த்தல்.

மேம்பட்ட கல்வித்  திறனை பெறுதல். கற்றல் வழி செயல் பாட்டை மேம்படுத்துதல்.

வாய்வழி மற்றும் எழுத்து வழி தொடர்பான திறன்களை மேம் படுத்துதல்.

பொது சுகாதார பராமரிப்பு களுக்கான தீர்வுகளையும் கண்டு பிடிப்புகளையும் மேம்படுத் துதல்.

பல்வேறு நோய் தொடர் பான ஆராய்ச்சிகளையும் அதற் கான மருத்துவத் தீர்வுகளையும் மேன் மைப்படுத்துதலே இந்த ஆராய்ச்சி  நாளின் பிரதான நோக்கங்களாகும்.

இனிவரும் காலங்களில் செப் டம்பர் திங்கள் 26ஆம் நாள் பல் கலைக்கழக ஆராய்ச்சி தினமாக தொடர்ந்து கொண்டாடப் படும். மருத்துவ மாணவர்களி டையே  ஆராய்ச்சி திறன் பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத் திடும் வகையில், இனிவரும் ஆண்டுகளில் முதுநிலை மருத் துவ மாணவர்களுக்கும் இத்திட் டம் விரிவாக்கம் செய்யப்படும். மருத்துவ மாணவர்கள் மேற் கொள்ளும் ஆராய்ச்சிப் பணி களுக்கு   இப்பல்கலைக் கழகத் தின்  சார்பில்  வழங்கப்பட்டு   வந்த 10 லட்சம்  ரூபாய் ஆனது  இந்த  ஆண்டு   முதல்  ஒரு கோடி ரூபா யாக உயர்த்தி வழங்கப்படும்.

இதன் மூலம் தரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப் பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த ஆராய்ச்சிப் பணிக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.   (Theme based research). மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிப் பணி களுக்கு உதவி செய்கின்ற வகையில் மாணவர் களுக்கு பல்வேறு தொழில் நுட்ப  வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவும் இப்பல் கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது என் பதை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக மருத்துவத் துறையில் மேம்பட்டுள்ள மேலை நாடுகளுக்கு இணையாக தமிழ் நாடு மருத்துவத் துறையில் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துகின்ற வகையில் இப் பல்கலைக்கழக  வளாகத்தில் ஏறத் தாழ 100 கோடி ரூபாய் மதிப் பீட்டில் 7 தளங்களுடன் கூடிய “கலைஞர் நூற்றாண்டு   மருத்துவ   ஆராய்ச்சி  மய்யம்”  புதிதாக கட்டப்பட உள்ளது என்பதை தெரிவிப்பதில் மட் டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் உரையாற்றினார்.

No comments:

Post a Comment