பாலின சமத்துவத்தை கோரியும், பாலியல் வன்முறைக்கு எதிராகவும் அய்ஸ்லாந்து பிரதமர் உள்பட 1 லட்சம் பெண்கள் வேலைநிறுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 30, 2023

பாலின சமத்துவத்தை கோரியும், பாலியல் வன்முறைக்கு எதிராகவும் அய்ஸ்லாந்து பிரதமர் உள்பட 1 லட்சம் பெண்கள் வேலைநிறுத்தம்

ரெய்காவிக், அக்.30- பாலின சமத் துவம் கோரியும்,பாலின அடிப்படையி லான ஊதிய இடைவெளிக்கு எதிரா கவும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வும் அய்ஸ்லாந்து நாட்டில் பிரதமர் கேத்ரின் ஜாகோப் ஸ்டோட் டிர் உள்ளிட்ட 100,000 பெண்கள் நாடு தழுவிய அளவில்  24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

3.73 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் 90% தொழிலா ளர்கள் தொழிற் சங்கமாக அணி திரண்டுள்ளனர். ஊதியம் வழங்கப் படும் பணிகளில் உள்ள பெண்கள் மட்டுமல்லாது, ஊதியம் வழங்கப் படாத வீட்டுப் பணிகளில் உள்ள பெண்கள் உட்பட இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டனர். மேலும் நாட்டின் பிரதமர் உட்பட 40 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த போராட் டத்தில் ஈடுபட்டனர்.1975 க்கு பிறகு நடைபெற்ற 7 வேலை நிறுத்தங்களில் இதுவே மிகப்பெரிய வேலை நிறுத்தமாகும்.

1961ஆம் ஆண்டு சம ஊதிய விதி கள் கொண்டு வந்த போதிலும், இன்னும் ஊதிய அடிப்படையில் பெண்கள் ஆண்களை விட பின்தங்கி யுள்ளனர் என்றும் ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கவில்லை எனக் கூற தொழில் நிறுவ னங்களை  2018ஆம் ஆண்டு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்பு றுத்தியதாகவும், இன்னும் பல பெண் கள் முன்னேற்றம் அடையாமல் பின்தங்கியுள்ளனர் எனவும்  போராட் டக் காரர்கள் தெரிவித்துள்ளனர். 

அய்ஸ்லாந்து புள்ளி விவரங்க ளின் படி, 2021 ஆம் ஆண்டு மொத்த ஊதிய இடை வெளி 10.2 சதவீதமாக இருந்தது. நிதி மற்றும் காப்பீட்டு வேலைகளில் 29.7 சதவீதமாக அதிக ரித்துள்ளது. 

அய்ஸ்லாந்து வேலை நிலைமை களில் பாலின சமத்துவம் கொண்ட நாடாக கூறப் பட்டாலும்  சுகாதாரம் மற்றும் கல்வித்துறை களில்  குறை வான ஊதியத்தில் அதிகளவு பெண் கள் வேலை செய்கின்றனர்.

மேலும்  2018ஆம் ஆண்டில் அய்ஸ் லாந்து பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்,  40 சத வீதத்திற்கும் அதிக மான பெண்கள் பாலியல் வன் முறையை எதிர்கொள்கிறார்கள் என் றும் நான்கில் ஒரு பெண் பாலியல்  வன்கொடு மைக்கு ஆளாகியிருப்ப தும்  தெரிய வந்தது. இந்நிலையில் “அய்ஸ்லாந்து ‘சமத்துவ சொர்க்கம்’ என்று அழைக்கப்பட்டாலும்  இன் னும் பாலின வேறுபாடுகள் உள்ளது அதை  சரிசெய்வதற்கான  அவசரத் தேவை உள்ளது” என அய்ஸ்லாந்து பொது ஊழியர்களுக்கான கூட்ட மைப்பு செய்தி தொடர்பாளர்.ஃப்ரீஜா ஸ்டீங்ரிம்ஸ்டோட்டிர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment