அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
நெம்மேலி, அக். 2- நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவு பெற்றதால், விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று நக ராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் நெம்மேலியில் அமைக்கப் பட்டு வரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடி நீராக்கும் நிலையத்தின் நிறைவு கட்டப் பணிகளை நகராட்சி நிர் வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் நேரு கூறிய தாவது:
நெம்மேலியில் ரூ.1,516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நாளொன் றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடி நீராக்கும் நிலையம் அமைப்பதற் கான பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது அனைத்து பணிகளும் நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளன. கடல் சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரக் கருவிகள் நிறுவும் பணிகள் அனைத்தும் முடியும் தருவா யில் உள்ளன. மேலும், கடல் நீரை நிலையத்துக்கு உள் கொணரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய் கடல் நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த் தேக்கத் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர் உந்து நிலையம் என இந்நிலை யத்தில் மொத்தம் உள்ள 23 அல குகளில் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள் ளன.
இந்நிலையத்திலிருந்து பெறப் படும் குடிநீர் மூலம் தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார் மலை, மேட வாக்கம், கோவிலம்பாக்கம், நன் மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன் பேட்டை, சோழிங்கநல்லூர், உள் ளகரம் - புழுதிவாக்கம், மடிப்பாக் கம். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனப் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இந்நிலையத் தின் இயக்குதலுக்கான ஒப்புதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் அனைத்து கட்டு மானப் பணிகளும் நிறைவு செய்யப் படும் தருவாயில் உள்ளன. விரை வில் சோதனை ஓட்டம் தொடங் கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர் லோஷ் குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், தலைமைப் பொறியாளர் ஆர்.கந்த சாமி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment