திருப்பத்தூரில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 8, 2023

திருப்பத்தூரில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் விழா!

தந்தை பெரியார் சிலை ஊர்வலம் - 200 இடங்களில் படம்- பொதுமக்கள் திரண்டு மரியாதை

திருப்பத்தூர், அக்.8  ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு'' என்ற தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா திருப்பத்தூர் மாவட்டத்தில் 17.9.2023 அன்று மக்கள் விழாவாக கொண்டாடப்பட்டது .

இவ் விழா திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே. சி. எழிலரசன் தலைமையில்  நடைபெற்றது. 

இந்த விழா நிகழ்வில் திராவிடர் கழகம், திராவிட முன் னேற்ற கழகம், காங்கிரஸ், மதிமுக, பாமக, விசிக, மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர இளைஞர் முன்னணி , ஆதித்தமிழர் பேரவை,  தமிழ்நாடு முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி , பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம், கற்பி பயிலகம், சட்ட பஞ்சாயத்து இயக்கம் மற்றும் பல சமூக அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் கூடினர். 

தந்தை பெரியார் வாழ்க! பகுத்தறிவுப் பகலவன் வாழ்க! வெண்தாடி வேந்தர் வாழ்க! திராவிட பேரினத்தின் தலைவர் வாழ்க! என்ற ஒலிமுழக்கங்களிடையே திருப்பத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர்   ந.நல்லதம்பி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். 

தொடர்ந்து அனைத்து அமைப்புகள் சாராத தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். தமிழ்நாடு அரசு தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சமூகநீதி நாள் என்று அறிவித்து வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியை, மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.எ.சிற்றரசன் கூற அனை வரும் தொடர்ந்து சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். 

உறுதிமொழி ஏற்ற பிறகு அங்கிருந்து அனைத்து இயக் கங்களை சார்ந்த தோழர்கள் அனைவரும்  தந்தை பெரியார் சிலையை, கொள்கை முழக்கங்கள் முழங்க ஊர்வலமாக திருப்பத்தூர் நகரில் கொண்டு சென்றனர். 

தந்தை பெரியார் படம் ஊர்வலம் நடத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  அறிவித்திருந்தார். ஆனால் திருப்பத்தூரில் தந்தை பெரியார்  அவர்களின் சிலையையே  ஊர்வலமாகக்  கொண்டு சென்று  ஊர்வலத்தை சிறப்பாக நடத்தினர். 

தந்தை பெரியார் முழு  சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமைக்கப்பட்டு, ஒலிபெருக்கியில் முழக்கங்கள் முழங்க, பறையோசை இடி முழக்கமாக ஒலிக்க   அனைத்துக் கட்சி தோழர்களும்,  நகர முக்கிய பிரமுகர்கள் முன்னே செல்ல ஆட்டம் ,பாட்டம், கொண்டாட்டத்துடன் ஊர்வலம் சென்றது. ஊர்வலத்தை  வியாபாரிகள், பொது மக்கள்  என்று அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வியந்தனர்.  

இவ்வாறு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட  தந்தை பெரியார் சிலை திருப்பத்தூர் வி. பி. திருமண மண்டபம் அருகில் உள்ள தந்தை பெரியார்- அண்ணா சிலையை  அருகே  முடிவுற்றது.

அங்கிருந்த தந்தை பெரியார் சிலைக்கு நகர திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர்   மற்றும் ஆவின் பால் நிறுவனத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் மாலை அணிவித்தார். பிறகு அனைத்து இயக்கம் சார்ந்த தோழர்களும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பிறகு இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து இயக்கங்கள் சேர்ந்த தோழர்களும் தந்தை பெரியாரின்  கொள்கைகள் இக் காலகட்டத்திற்கும்,  நாட்டு மக்களுக்கும் எவ்வளவு  முக்கியமான தேவை என்பதை குறித்து உரையாற்றினார்கள்.

நிறைவாக மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 

இந்நிகழ்வில்   திருப்பத்தூர் மாவட்டம் சார்பில்  மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலா மற்றும் மாவட்ட அமைப்பாளர் விஜயா அன்பழகன், மாநில எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ம. கவிதா, மாவட்ட எழுத்தாளர்  மன்ற தலைவர்  நா. சுப்புலட்சுமி, மாவட்ட மகளிரணி தலைவர் சாந்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் வெண்ணிலா, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கற்பக வள்ளி, மாவட்ட மகளிரணி செயலாளர் சபரிதா,  தாமரை, தேன் மொழி, நவநீதம் மற்றும் மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர், மாவட்ட  துணைச்செயலாளர் எம்.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட அமைப்பாளர் வி. ஜி. இளங்கோ, நகர தலைவர்  காளிதாஸ், நகர செயலாளர் சித்தார்த்தன், இந்திரஜித், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பழனிசாமி, விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஞானபிரகாசம்,  விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர்  வ.புரட்சி, விடுதலை வாசகர் வட்ட துணைச்செயலாளர்  ஆ.பா.செல்வராஜ் மற்றும் நகர அமைப் பாளர் முருகன், சங்கர், மோகன்,  பன்னீர், பாலாஜி, முத்து செல்வன்  மற்றும் ஏராளமான கழக தோழர்கள் பங்கேற்றனர். 

அதேபோன்று  திருப்பத்தூர் மாவட்ட அனைத்து ஒன்றி யங்களிலும்  தந்தை பெரியார் பிறந்த நாள் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டன. 

தோக்கியம் பகுதியில் கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா. கனகராஜ், மாடப் பள்ளி பகுதியில் கந்திலிஒன்றிய செயலாளர் நா.நாகராசன் தலைமையிலும், சோலையார்பேட்டை பகுதி யில், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்  சி. தமிழ்ச் செல்வன், மாவட்ட ப. க. செயலாளர் கோ. திருப்பதி  மற்றும் சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர் தா.பாண்டியன் தலைமையிலும், வாணியம்பாடி  பகுதியில், வாணியம்பாடி நகர தலைவர் அன்புச் சேரன் மற்றும் சோலையார்பேட்டை ஒன்றிய அமைப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலும், ஆம்பூர் பகுதியில் ஆம்பூர் மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் ஆம்பூர் நகர தலைவர் ரவி தலை மையிலும், மாதனூர் பகுதியில் மாதனூர் ஒன்றியத் தலைவர் வெற்றி மற்றும் மாதனூர் ஒன்றிய  செயலாளர் வெங்கடேசன் தலைமையிலும், ஏலகிரி பகுதியில் ஏலகிரி கிளை தலைவர் முனிரத்தினம் மற்றும் தொழிலாளரணி அமைப்பாளர் சின்ன தம்பி தலைமையிலும், உடையாமுத்தூர் பகுதியில் தொழி லாளரணி செயலாளர் பன்னீர் மற்றும் தொழிலாளரணி அமைப்பாளர் மோகன் தலைமையிலும், லக்கி நாயக்கன்பட்டி  பகுதியில்  கிளை தலைவர் சரவணன் மற்றும் செயலாளர் லட்சுமணன் தலைமையிலும், நத்தம் பகுதியில் மாவட்ட ப.க. செயலாளர் வே.அன்பு மற்றும்  சுந்தரம் பள்ளி  ஒன்றிய தலைவர் கோ. சங்கர் தலைமையிலும் மற்றும் அனைத்து  ஒன்றியங்களில் கழகத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், பெரியார் பற்றாளர்கள்  அரசு அலுவலர்கள் , பள்ளிகள் மற்றும் அனைத்துக் கட்சியினர் இல்லங்களிலும் தந்தை பெரியார் படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி தந்தைபெரியார் 145 ஆவது பிறந்த நாளை வெகு விமரிசை யாக கொண்டாடினர். 

 தந்தை பெரியார் படங்களை சுமார் 200 இடங்களுக்கு மேல்  வைத்து தோழர்கள் மாலை அணிவித்து பொதுமக் களுக்கு இனிப்புகள் வழங்கி அனவரும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை  மிகச்சிறப்பாக கொண்டி மகிழ்ந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு அனைத்து மாவட்ட தோழர்களும்  தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழாவை வெகுசன  மக்கள் விழாவாக கொண்டாடி மகிழ்வோம்.

No comments:

Post a Comment