ஆவடி, அக்.2 மாவட்டப் பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் 48 ஆண்டுகளுக்குப் பின் தந்தை பெரியார் சிலை புதுப்பிக்கப்பட்டது.
ஆவடி மாவட்டத்தில் பூவிருந்த வல்லி செல்லும் முக்கிய சாலை யோரம் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ளது. Tube products of India மற்றும்T.I. Cycles of India வின் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட இச்சிலையை, நாவலர் நெடுஞ்செழியன் முன் னிலை ஏற்க, டி.ராஜரத்தினம் தலை மையில் 23.03.1975 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் இச்சிலை திறந்து வைக்கப்பட்டதாகும்.
புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலை!
கடந்த ஆகஸ்ட் மாதம் நடை பெற்ற மாவட்ட கலந்துரையாடலில், ஆவடி பெரியார் சிலையை புதுப் பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. அதே கூட்டத்தில் கலந்து கொண்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் த.ஜானகிராமன் அந்தப் பொறுப்பை தான் ஏற் றுக்கொண்டதாக உறுதியளித்தார். அதன்படியே புதிதாக சுற்றிலும் கம்பித்தடுப்புகள் வைத்து, கல் வெட்டுகள் புதுப்பிக்கப்பட்டு, சிலை புதிய வண்ணம் அடிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ஜெயராமன், நகர கழகச் செயலாளர் இ.தமிழ்மணி, மாவட்ட துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், திருமுல்லைவாயில் இரணியன், பட்டாபிராம் வேல்முருகன் ஆகியோர் இப்பணிகளில் ஈடுபட்டனர்.
பெரியார் சிலை திறப்பு விழா!
தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளான 17.9.2023 அன்று காலையில், சிலை அருகில் தெருமுனை கூட்டம் நடை பெற்றது. புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலையை த. ஜானகிராமன் திறந்து வைத்தார். தி.மு.க. 36 ஆம் வார்டு கவுன்சிலர் ஆஷா ஷெரீஃப் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்தார். கழக மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் கொடியேற்றினார். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மாவட்டக் காப்பாளர் பா. தென்னரசு. தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர் க. மு. ஜான் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!
நிகழ்வில் மாவட்டச் செயலாளர் க. இள வரசன், துணைத் தலைவர்கள் மு. ரகுபதி, வை. கலையரசன், துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஜெயராமன், பகுத் தறிவாளர் கழகச் செயலாளர் க. கார்த்தி கேயன், பருத்திப்பட்டு சுந்தரராஜன், கழகத் தோழர்கள் ராணி ரகுபதி, சிலம்பரசன், கீதா ராமதுரை, ரா.கலைவேந்தன், நகரத் தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, திருவள்ளூர் மாவட்ட திராவிட தொழிலாளர் அணித் தலைவர் கி. ஏழுமலை, அம்பத்தூர் பூ. ராமலிங்கம், நாகம்மையார் நகர் ரவீந்திரன், திருமுல்லைவாயில் இரணியன், வஜ்ரவேல் மற்றும் தி.மு.க. தோழர்களும் கலந்து கொண் டனர்.
No comments:
Post a Comment