கோயிலை நீங்கள்தான் கட்டினீர்கள். கல் தச்சருக்குக் காசு கொடுத்துக் குழவிக் கல்லை அடித்து வைக்கச் சொன்னீர்கள். சாமி பூஜைக்கு மானியம் விட்டீர்கள். இவ்வளவும் பண்ணி விட்டு, நீ கோயிலின் வெளியே இருந்து கன்னத்தில் போட்டுக் கொள்ளு என்கின்றானே! "நீ இழி ஜாதி, நீ தொட்டால் சாமி தீட்டாகிவிடும், சாமி செத்துவிடும்" என்கின்றானே.? இதைப் பொறுத்துக் கொண்டுதானே சாமி கும்பிடு கின்றாய். இப்படி நீ தொட்டால் தீட்டாகிவிடும், செத்து விடும் என்கின்ற கடவுளை நீ கும்பிடலாமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment