பழைய காலத்தில் மனிதனுக்கு அறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி உணர்ச்சியும் இல்லாத காலத்தில்தான் கடவுள் என்ற நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். இடி, மின்னல், மழை, வெள்ளம், பூகம்பம், எரிமலை முதலியவற்றைக் கண்டு ஒடுங்கித் தனக்கு எட்டாத ஒரு சக்தி தனிமையில் இருப்பதாக மனிதன் கற்பனை செய்து கொண்டதே கடவுள் என்பதாகும். இந்தக் கடவுள் எதற்காக? அது மனிதனுக்குத் தானாகத் தோன்றியதா? அல்லது வேறு மக்களால் தோற்றுவிக்கப்பட்டதா? தானாகத் தோன்றியிருக்குமானால் ஏன் எல்லோருக்கும் தோன்றவில்லை? தோன்றினவர்களுக்கும் பலப்பல விதமாகத் தோன்று வானேன்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment