செங்கல்பட்டு,அக்.14- செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யத்தில் 1.10.2023 உடன் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிட மிருந்து, வேலைவாய்ப் பற்றோர் உதவித் தொகை திட் டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது.
10ஆம் வகுப்பு (தோல்வி), 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவை தொடர்ந்து புதுப்பித்து, 30.9.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளை ஞர்களுக்கு, தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக் கான உதவித்தொகை வழங்கப் படுகிறது.
குடும்ப ஆண்டு வருமானம்
மாற்றுத் திறனாளிகளை பொறுத் தமட்டில், வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
பொறியியல், மருத்துவம், கால் நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி. நர்சிங், போன்ற தொழிற் பட்ட படிப்புகள் முடித்த வர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையை பெறுவ தற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியின மனுதாரர்கள் 30.9.2023 அன்றைய நிலையில் 45 வயதிற் குள்ளும், இதர இனத்தை சேர்ந் தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர் கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதார மாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய் யத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ள லாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்களை, மனுதாரர்கள் வரு கிற டிசம்பர் மாதம் 10ஆம் தேதிக் குள்ளாக அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டப் பிரிவில், அனைத்து அசல் கல்விசான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக் கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.
-இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment