100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நிதிவழங்க மறுப்பதாககூறி திரிணாமுல் காங்கிரஸ் டில்லியில் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நிதிவழங்க மறுப்பதாககூறி திரிணாமுல் காங்கிரஸ் டில்லியில் போராட்டம்

புதுடில்லி, அக். 3 - மேற்கு வங்காளத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி சுமார் ரூ.15 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்திருப்பதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிதியை விடுவிக்கக் கோரி கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியார் நினை விடத்தில் நேற்று (2.10.2023) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கட்சி சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

காந்தியாரின் பிறந்த தினத் தன்று அவரது நினைவிடத்தில் நடந்த இந்த போராட்டம் டில் லியில் பரபரப்பை ஏற்படுத் தியது.

இதற்கிடையே திரிணாமுல் காங்கிரசின் இந்த குற்றச் சாட் டுக்கு ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்து உள்ளார். 

மாநிலத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 25 லட்சம் போலி அட்டைகள் இருப்ப தாக குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த ஊழல் தொடர்பாக சி.பி.அய். விசார ணைக்கு பரிசீலித்து வருவதாக கூறி யுள்ளார். 

மேற்கு வங்காள அரசு மற் றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மத்திய நிதியில் பெரிய அளவில் முறைகேடு களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment