அக்டோபர் 1 தேசிய குருதிக் கொடை நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 1, 2023

அக்டோபர் 1 தேசிய குருதிக் கொடை நாள்

சாலைகள்தோறும் குருதி கொடையாளர் மன்றம் அமைக்க  இளைஞர்கள்  முன்வர  வேண்டும். இந்திய நாட்டிற்கு 400 லட்சம்  யூனிட் ரத்தம் தேவை. ஆனால் இருப்பில் (stock) 40 லட்சம் யூனிட் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் ஏதேனும் ஒரு வருக்கு குருதி அவசரமாக தேவைப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக கரோனாவிற்கு பிறகு தன்னார்வ (Voluntary) குருதிக் கொடையாளர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மருத்துவமனைக்கு சென்று குருதி வழங்குவதற்கு சிறிது அச்சம் நிலவுகிறது.

இளைஞர்கள் குழுக்களாக (Team) இணைந்து சாலைகள் மற்றும் காலணிகள் தோறும் குருதி கொடையாளர் மன்றத்தை துவக்க வேண்டும்.

18வயது முதல் 50வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவில் இணையலாம். காலணிகளின் அருகில் உள்ள மருத்துவரை முக்கிய ஆலோசகராக நியமித்து, அறிவுரைகளை பெறலாம்.

தொடர்ந்து குருதிக் கொடை வழங்குவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் அடங்கிய பதாகைகளை மன்றத்தின் அருகில் நிறுவி பொதுமக்களுக்கு விழிப் புணர்வை  ஏற்படுத்த வேண்டும்.

இவை அனைத்தும் நீண்ட தூரம் உள்ள ரத்த வங்கியையோ அல்லது கொடையாளர்களை அணுக வேண்டியதை தவிர்த்து, அவசர தேவைக்கு,  பகுதியில் உள்ள மன்ற உறுப்பினர்களே  குருதியை அளிக்கலாம்.

தற்போது டிரண்டிங் (trending) ஆக உலாவரும் எங்கேயோ வசிக்கும் 50 குருதிக் கொடையாளர் பட்டியலை (List)  வாட்சப் (whatsapp) மற்றும் இதர ஊடகங்களில்  வெளியிடுவதை தவிர்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பட்டியலை வெளியிடும் பெரும்பாலான இளைஞர்கள்  அப்பட்டியலில் இடம் பெறுவதில்லை.

பட்டியலில் இடம் பெற்றிருக்கும் கொடையாளர்கள் சில நாட்களுக்கு முன் குருதியை வழங்கியிருப்பார்கள். மீண்டும் வழங்க குறைந்த பட்சம் 90 நாட்கள் ஆகும்.

பட்டியலில் இடம் பெறாத புதிய இளைஞர்கள் அதிகளவில் எவ்வித அச்சமின்றி மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று குருதியை வழங்கலாம்.

அரசுக்கு  ஓர் வேண்டுகோள்!

பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகங்களில் குருதிக் கொடை விழிப்புணர்வு கட்டுரைகள் இடம் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

நோக்கம்: விளையாட்டு வீரர்களே குருதிக் கொடை புரியும்போது, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி,  அதிகளவில் குருதிக்கொடை வழங்க முன்வருவார்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே 29 ஆண்டுகளாக  குருதிக்கொடை  வழங்கி வருகிறேன்.  சமூக விழிப் புணர்வு கட்டுரைகளை தொடர்ந்து வழங்கி வருகிறேன்.

- இரா.எத்திராஜன்


No comments:

Post a Comment