கந்தர்வக்கோட்டை அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

கந்தர்வக்கோட்டை அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

கந்தர்வ கோட்டை, செப். 19- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன் றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் அறி ஞர் அண்ணா பிறந்த நாள், உலக ஓசோன் தினம், அனைத்துல மக்க ளாட்சி நாள் ஆகிய முப் பெரும் விழா நடைபெற் றது.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி தலைமை வகித் தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்று மக்களாட்சி தினம் குறித்து பேசினார்.

இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் ரகமதுல்லா முப்பெரும் விழாவில் பேசியதாவது:

அறிஞர் அண்ணா மெட்ராஸ் என்பதை மாற்றி தமிழ்நாடு என பெயரிட்டார். அண்ணா ஆட்சியில் இருந்த 2 ஆண்டு காலத்தில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார் எனவும், உலக ஓசோன் தினம் குறித்து பேசும் பொழுது

உலக ஓசோன் தினம் செப்டம்பர் 16 அன்று அய்க்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.  1987 ஆம் ஆண்டில், ஓசோன் படலத்தின் சிதைவுக்குக் காரணமான பொருட் கள் குறித்த மாண்ட்ரீல் ஒப்பந்தில் உலக நாடுகள் கையெழுத்திட்ட தேதி யின் நினைவாக செப்16 உலக ஓசோன் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப் படுகிறது .மாண்ட்ரீல் நெறிமுறை ஓசோன் பட லத்தைப் பாதுகாப்பதற் கான உலகளாவிய ஒப்பந் தமாகத் தொடங்கியது.

புவி மண்டலத்திலி ருக்கும் ஓசோன் படலம் தான், நம்மை சூரியனிலி ருந்து வரும் புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. ஓசோன் படலம் என்பது நமது பூமியை போர்த்தியிருக் கும் ஒரு மெல்லிய வாயுப் படலமாகும். இது ஆக்ஸி ஜனின் ஒரு வடிவம் ஆகும் (O3). அதாவது மூன்று ஆக்சிஜ‌ன் அணுக் கள் சேர்ந்தது ஒரு ஓசோன் மூலக்கூறு ஆகும். ஓசோ னின் முக்கிய பணியே சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை தடுத்து பூமியில் உள்ள உயிர்களை பாதுகாப்பது பணியை செய்கிறது என்று பேசினார். ஒசோன் பட லம் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப் பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, செல்விஜாய் ,வெள்ளைச் சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment