திருச்சி, செப்.22 தந்தை பெரியார் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காவலர் குடியிருப்பு மற்றும் அண்ணா நகர் பகுதியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ் சுடர் பெல் ஆறுமுகம் பெல் ராமகிருஷ்ணன், துப்பாக்கி தொழிற்சாலை சுப்பிரமணியன் கனகராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக ஒன்றிய செயலாளர் கும்பக்குடி கங்காதரன் திமுக பொறுப்பாளர்கள் ஆறுமுகம் திலகராஜன் மோகன் கோவிந்தராஜன் ஆகியோரும் திமுக ஒன்றிய கவுன்சிலர் கயல்விழி உட்பட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திலகராஜன் அவர்கள் சமூக நீதி நாள் உறுதி மொழி சொல்ல அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
அண்ணா நகரில் இரண்டாவது பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள சிலைக்கு திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், பெல் ஆறுமுகம், ராமகிருஷ்ணன் அவர்களும் சுப்பிரமணி அவர்களும் மாலை அணிவித்து சிறப்பித்தனர் “திமுக ஒன்றிய செயலாளர் கங்காதரன் கவுன்சிலர் கயல்விழி திமுகவைச் சேர்ந்த திலகராஜன், சிறீரங்கம் ஆறுமுகம், மோகன், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து சிறப்பித்தனர். சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கபட்டது
அண்ணா நகரிலும் சமத்துவபுரத்திலும் காவலர் குடி யிருப்பிலும் கழகக் கொடிகள் ஏற்றப்பட்டன. அதன் பிறகு அண்ணா நகர் தந்தை பெரியார் படிப்பகத்தில் பெரியார் பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத் திற்கு திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ் சுடர் தலைமையேற்றார் தென்மொழிப் பண்ணன் ஈகவரசன் பெரியாரைப் பற்றிய பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் எழுதிய பெரும்பணியை சுமந்த உடல் என்ற அருமையான பாடலைப் பாடி சிறப்பித்தார் நிகழ்ச்சியில் திருவரங்கம் ஆறுமுகம், மோகன், திலகராஜன், ராமகிருஷ்ணன் பாரதி தாசன் பல்கலைக்கழக மேனாள் செனட் உறுப்பினர் ராஜ லிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.
No comments:
Post a Comment