உ.பி. பிஜேபி சாமியார் ஆட்சியில் கடந்த 8 மாதங்களில் கிறிஸ்தவர்கள் மீதான 500 தாக்குதல்கள்
புதுடில்லி, செப்.21 - கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பாக டில்லியில் உள்ள சிவில் சமூக அமைப்பான யுனைடெட் கிறிஸ்டியன் போரம் புதிய தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. தரவில், “2023-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங் களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல் நிகழ்வு மிகமோசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும், முதல் 8 மாதங்களில் 23 மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 525 வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன” எனக் கூறியுள்ளது.
மேலும் இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு முழுவதும் நடந்த மொத்த நிகழ்வுகளின் எண்ணிக்கையை வெறும் 8 மாதங்களிலேயே நெருங்கியுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளில் பா.ஜ.க. ஆளும் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 8 மாதங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 211 நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. சத்தீஸ்கரில் 118 நிகழ்வுகளும்
அரியானாவில் 39 நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. சத்தீஸ் கரில் அரங்கேறிய சம்பவங்கள் அனைத்தும் ஹிந்துத்துவா அமைப்புகளால் நிகழ்த்தப் பட்டவை ஆகும். சத்தீஸ்கர் மட்டுமல்ல, நாடு முழுவதும் 23 மாநிலங் களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அரங்கேறிய 95% நிகழ்வுகள் ஹிந்துத்துவா கும்பல்களால் அரங்கேற்றப்பட்டுள்ளன. பா.ஜ.க.வின் இழி அரசியலால் கடந்த 5 மாதங்களாக பற்றி எரிந்து வரும் மணிப்பூர் மாநிலத்தில் 386 வழிபாட்டுத்தலங்கள் கொளுத்தப்பட்டுள்ளன.
இதில் 254 கிறிஸ்தவ தேவாலயங்கள் ஆகும். மேலும் கிறிஸ்தவ மக்களை குறி வைத்து தாக்குதல் நிகழ்வுகள் அங்கு மிக மோசமாக அதிகரித்து வருகின்றன.
No comments:
Post a Comment