பெலகாவி, செப்.25 பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர், விட்டல் ஹலேகர் நடத்திய,கூட்டத்தில் கல் வீசப்பட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இவரது சொந்த ஊர் கானாபுரா அருகே உள்ள டோபினஹட்டி கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி, பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிலை கரைக்க எடுத்து செல்லப்பட்டது அப்போது சிலையைத்தூக்கிகொண்டு சென்ற சிலர் சிறுபான்மை மதத்திற்கு எதிராக கூச்சல் போட்டுக்கொண்டே இருந்தனர் இதற்கு சிறுப்பான்மையினர் எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கு தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் விட்டல் ஹலேகர் தலைமையில், சமாதான கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் இருந்து சிலர் கல் வீசினர். அந்த கல் சட்டமன்ற உறுப்பினர், அருகில் சென்று விழுந்தது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், இருதரப்பினரையும் தடியால் அடித்து விரட்டினர். மோதல், கல்வீச்சு தொடர்பாக 40 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
No comments:
Post a Comment