மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு - எதிர்க்கட்சிகள் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 3, 2023

மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு - எதிர்க்கட்சிகள் கண்டனம்

மும்பை,செப்.3- மராட்டிய மாநிலம் ஜால்னாவில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பதற்கு கண்டனம் வலுத்துள்ளது. மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஜால்னா மாவட்டத்தில் உள்ள  Antarwali Saraati கிராமத்தில் மராத்தா சமூகத்தினர் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 29ஆம் தேதி தொடங்கிய உண்ணா நிலைப் போராட்டத்தில் போராட்டக் காரர்களும் காவல்துறையினருக்கும் இடையே  1.9.2023 இன்று  தினம் மோதல் வெடித்தது. கூட்டத்தை கட்டுப் படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத் தனர்.

பின்னர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக் காரர்களை விரட்டி அடித்தனர். உண்ணா நிலைப் போராட்டம் பெரும் வன் முறையாக வெடித்ததை அடுத்து துலே -சோலாப்பூர் நெடுஞ்சாலையில் சென்ற பேருந்துகளை வழிமறித்து போராட்டக் காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். வன் முறையில் 40க்கும் அதிகமான காவல்துறையினர் காயம் அடைந்ததாக தெரிவிக் கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, காங் கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment