செருமங்கலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 23, 2023

செருமங்கலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

மன்னார்குடி, செப். 23- மன்னார்குடி அருகே உள்ள செருமங்கலத்தில் சாலை விரிவாக்க பணிக்காக இட மாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப் பட்ட தந்தை பெரியார் சிலைக்கு அய்யாவின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழ கம் ,பகுத்தறிவாளர் கழகம்,திமுக ஆகியவற்றின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

கடந்த 1990 ஆம் ஆண்டு மன்னார்குடி அடுத்த செருமங்கலம் உடையார் தெரு,பேருந்து நிறுத்தம் அருகே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் முழு உருவச் சிலையினை,திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத் தார்கள். தற்போது ,சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடச் சாலை விரிவாக்கப் பணி காரண மாக செருமங்கலம் உடையார் தெரு பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலை அகற்றப்பட்டு அதன் அருகிலேயே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி நுழைவு வாயில் அருகில் சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டது.

தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சீரமைக்கப் பட்ட தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 17.9.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மன்னார்குடி கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமை வகித்தார்.

தோழர்களின் வாழ்த்து முழக் கங்களுக்கு இடையே ,திமுக முன் னாள் ஒன்றிய பிரதிநிதி க.ராம லிங்கம், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மன்னார் குடி கழக மாவட்ட செயலாளர் இராயபுரம் கோ.கணேசன் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார்.

கழகப் பேச்சாளர் வழக்குரை ஞர் சு.சிங்காரவேலு, தந்தை பெரி யாரின் கொள்கைகள் குறித்தும் ,திராவிடர் கழகத்தினுடைய செயல் பாடுகள் பற்றியும் விளக்கி பேசினார்.

செருமங்கலத்தில் தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்ட வரலாறு, தற்போது இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சிலை அமைக்க இடம் தேர்வு செய்யப் பட்டது சிலை அமைக்க நடை பெற்ற பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை விளக்கி திமுக மேனாள் ஒன்றிய பிரதி க.ராம லிங்கம் பேசினார்.

கூட்டத்தில்,தந்தை பெரியார் சிலையினை இடமாற்றம் செய்து சீரமைக்கும் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய திராவிடர் கழகம், திமுக  மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் ,பெரியார் சிலை ஏணி அமைத்து தந்த திமுக நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் நா.கவியரசுக்கு, இதற்கு உறுதுணை யாக இருந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.இராச மாணிக்கம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதே போன்று சிலையின் எதிரே பள்ளமாக இருந்த பகுதியை மேடாக்குவதற்காக அனைத்து உதவிகளையும் செய்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவருமான ஜி.பாலு, மன் னார்குடி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.டி.முத்துவேல் உள்ளிட்டோருக்கு நன்றி கூறப் பட்டது.

விழாவில், திமுக கிளைச் செய லாளர் பி. கருப்பையன், மேனாள் ஒன்றிய பிரதிநிதி ந. முருகையன் ,ஒன்றிய பிரதிநிதி க. தமிழ்ச் செல்வம், திமுக மாணவரணி ரா.முத்தையா , க.பாலகிருஷ்ணன், ஏ. மதியழகன், எடமேலையூர் திமுக உறுப்பினர் என். தமிழரசன், க.சித்தார்த்தன், எடமேலையூர் எஸ்.பொன்முடி ,நீடாமங்கலம் திராவிடர் கழக ஒன்றிய தலைவர் தங்க.பிச்சைக் கண்ணு,பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்டத் தலை வர் தங்க. வீரமணி .ஆசிரியரணி மண்டலச் செயலாளர் சி. ரமேஷ், எடமேலையூர் கிளைச் செயலாளர் ந. லட்சுமணன், ஒன்றிய துணைத் தலைவர் பி. வீராச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர் இராயபுரம் சக்திவேல், ஒன்றிய செயலாளர் ச. அய்யப்பன், நீடாமங்கலம் நகரத் தலைவர் வா. சரவணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் லோக நாதன், வடுவூர் கழக தோழர்கள் ஆசை ஒளி, உலகநாதன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கட்டக்குடி ரகு, இளைஞர் அணி மாவட்ட தலைவர் கா. ராஜேஷ் கண்ணன், இளைஞர் அணியை சேர்ந்த ராமச்சந்திரன், சபேஷ், பிரிதிவிராஜ், தீபன் ராஜ், கரு வாக்குறிச்சி ப. கோபாலகிருஷ்ணன், நல்லிக்கோட்டை நல்லதம்பி, நீடா மங்கலம் நகர இளைஞரணி தலை வர் ரா. அய்யப்பன், நீடாமங்கலம் ஒன்றிய கழகத் தோழர்கள் எம். மாதேஷ், எம்.தீபக்,எஸ். மகேஸ் வரன், எம். பகலவன், யு.கதிர்வேல். கோபாலகிருஷ்ணன், கார்த்திக், பெரியக்கோட்டை கோ.ரா.வீரத் தமிழன், மன்னார்குடி கழக மாவட்ட இளைஞரணி செயலா ளர் கா. இளங்கோவன், மன்னார் குடி ஒன்றிய தலைவர் மு. தமிழ்ச் செல்வம், மன்னார்குடி நகர பகுத் தறிவாளர் கழகத் தலைவர் கோவி.அழகிரி, பேராசிரியர் கோ.காம ராஜ், மாவட்ட அமைப்பாளர் ஆர். எஸ்.அன்பழகன், மன்னார் குடி நகர செயலாளர் மு.இராம தாசு, பூவனூர் அனந்தராமன், பெரியார் பெருந்தொண்டர்கள் மேலத்திருப்பாலக்குடி சி.கோவிந்த ராசு, மேலவாசல் கோ. திரிசங்கு ,மன்னார்குடி நகர அமைப்பாளர் மு. சந்திரபோஸ், மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி செயலாளர் இரா. கோபால், மன்னார்குடி கழகத் தோழர்கள்  சிவா. வணங்காமுடி, ஜெ.சம்பத், மன்னை சித்து, மேலவாசல் தோழர்கள் தி. பெட்ரண் ரசல், மாணவர் கழகம் பெ. அன்புச்செல்வன், காரக் கோட்டை சி.குப்புசாமி, மேலவாசல் பெரியார் பிஞ்சு  இளமொழி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment