பிஜேபி நாடாளுமன்ற கூத்து மக்களவைத் தலைவர் வருவதற்கு முன்பு தேசிய கீதமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

பிஜேபி நாடாளுமன்ற கூத்து மக்களவைத் தலைவர் வருவதற்கு முன்பு தேசிய கீதமாம்

புதுடில்லி, செப்.19 மக்களவைத் தலைவர் வருவதற்கு முன்பே தேசிய கீதம் ஒலித்ததற்கு எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தேசிய கீதமும், தொடரின் இறுதியில் 'வந்தே மாதரம்' பாடலும் ஒலிப்பது வழக்கம். நேற்று (18.9.2023)  சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் என்பதால், மக்களவையில் ஆடியோ வசதி மூலமாக தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் அப்போதுதான் மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா சபைக்குள் நுழைந்தார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ் கோகாய், பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், தேசிய கீதம் பாதியில் நிறுத்தப்பட்டது.

 பின்னர் இருக்கையில் அமர்ந்த மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானப்படுத்தினார். சில நேரங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு விடுவதாக அவர் கூறினார். இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.


நாடு முழுவதும் ஒரே மதமா?

 மனுவை தள்ளுபடி செய்தது 

உச்ச நீதிமன்றம்

புதுடில்லி, செப்.19 நாடு முழுவதும் ஒரே மதத்தை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

உச்சநீதிமன்றத்தில்  சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதாதன்சு துலியா ஆகிய இருவரும்  நாடு முழுவதும் ஒரே மதத்தை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர் 

இந்த மனு நேற்று (18.9.2023) விசாரணைக்கு வந்த போது  நாடு முழுவதும் ஒரே மதம் என்றால் மற்ற மதங்களை பின்பற்றுபவரை உங்களால் பின்பற்றாமல் தடுக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். 

அதற்கு இந்த மனுவை தாக்கல் செய்தவர்களில் ஒருவர் ’அரசியல் சாசனத்தின் 32 ஆவது பிரிவின்படி இந்திய மக்கள் சார்பில் ஒரே அரசியல் சாசன மதம் கூறி இந்த பொதுநல பணிகளை தாக்கல் செய்திருப்பதாக கூறினார்.   ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த உச்சநீதிமன்றத் தில் நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.


No comments:

Post a Comment