நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பேச்சு
சென்னை, செப். 22 நெருக்கடியில் சிக்கியுள்ள ஜனநாயகம், சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையை அரசி யல் ரீதியாக எதிர்கொள்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விகடன் பிரசுரம் சார்பில், ‘கலைஞர் 100- _ விகடனும் கலை ஞரும்’ நூல் வெளியீட்டு விழா, சென்னையில் 20.9.2023 அன்று நடைபெற்றது. விழாவில், முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.
விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நூல கங்களுக்கு நூல்கள் வாங்கக்கூடிய விஷயத்தில் நடந்திருக்கக் கூடிய பல்வேறு தவறுகளை இங்கே சொல்ல முடியாது; சொல்வதும் முறையல்ல. ஆனால், அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நூல்கள் தேர்வு: ஒளிவுமறைவற்ற வகையில் நூல்களைத் தேர்வு செய்ய இணைய வழி வழியாக விண்ணப்பங் களைப் பெற்று அதனைத் தேர்வு செய்ய நிபுணர்கள் அடங்கிய குழு அமைப்பதற்கான பணிகள் விரை வில் முடிக்கப்படும். மேலும், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நூல்கள் வாங்குவதற்கு 20 துறை சார்ந்த நிபுணர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் மூலம், 3.5 லட்சம் புத்தகங்களை ரூ.50 கோடிக்கு வாங்கியிருக்கிறோம்.
மதிப்பு-மரியாதை
இந்த விழாவில், பத்திரிகை அதிபர்கள் பெருமளவில் கூடியிருக்கிறார்கள். இந்த இடத்திலிருந்து ஒரு கருத்தைக் கூற விரும் புகிறேன். ஓர் ஆட்சி செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்களை மன பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். அவ்வாறு எழுதினால்தான், நீங்கள் விமர்சிக்கும் போதும், அதற்கு உண்மையான மதிப்பும், மரியா தையும் இருக்கும். எதையும் ஆதரித்து எழுதாமல், விமர்சித்து மட்டுமே எழுதினால், அந்த விமர் சனங்களுக்கு மதிப்பே இருக்காது.
சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் அதை சுட்டிக் காட்டுவதும்தான் நடுநிலை யான பத்திரிகைக்கு இருக்கக்கூடிய தருமமாகும். அதன்படி, தமிழ் நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டும். நாட்டுக்காகவும் நாட்டு மக்கள், சமுதாயம், நம் இனம் ஆகியோருக்காக நடுநிலையுடன் செயலாற்ற வேண்டும். இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமூகநீதி ஆகியன நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. இதை அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்கொண்டு தடுப்போம். ஆனால், அது மட்டும் போதாது.
ஜனநாயகத்தினுடைய நான்கா வது தூணாக இருப்பது, போற்றப் படுவது பத்திரிகைகள்தான். எனவே, தங்களுடைய கடமையை நீங்கள் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றமாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தா லும், அரசியல் சட்ட அமைப்புகள் அனைத்தும் இந்தத் தருணத்தில் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன.
எனவே, ஜனநாயகம் காக்கவும், அதன் மூலமாக இந்தியாவைக் காக்க வேண்டிய கடமையும் நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரிகைகளிடம்தான் இருக்கிறது. ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகைத் துறை என்பதே எதிர்காலத்தில் இருக்கும் என்றார் முதலமைச்சர்.
விழாவில், விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் வரவேற்றார். நடிகர் கமல்ஹாசன், பத்திரிகையாளர் என்.ராம், ‘தின மலர்’ இணை ஆசிரியர் இரா. கிருஷ் ணமூர்த்தி ஆகியோர் உரையாற் றினர். மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment