வெம்பக்கோட்டை, செப். 2- வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய் வில் செங்கற்கள் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி யில் தங்க அணிகலன், தங்கத் தாலி, ஆண் உருவ சுடுமண் பொம்மை, யானை தந்த பகடைக் காய், சுடுமண் அகல் விளக்கு, சுடுமண் வணிக முத்திரை சுடுமண்ணால் ஆன வட்ட வடிவ தட்டு, அணிகலன், பச்சை மற் றும் வெள்ளை நிற பாசி மணிகள், சங்கு, துதியாளி பொறிக்கப்பட்ட வேணாட்டு சிற்றரசு கால செப்பு நாணயம் உள்ளிட்ட எண்ணற்ற வகையிலான தொன்மை யான பொருட்கள் கண் டெடுக் கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தற்போது செங்கற்களால் ஆன 2 மீட்டர் நீளம் கொண்ட சுவரும் மற் றொரு அகழாய்வு குழி யில் கருங்கற்களால் ஆன வட்ட வடிவ சுவரும் கண் டறியப் பட்டுள்ளது. மேலும் சுவரின் முழுமை யாக கண்டறியும் பணி நடைபெற்று வரு கிறது. இது, இப்பகுதியில் வாழ்ந்த தொன்மையான மனிதர் களின் குடியிருப்பு அல் லது தொழில் கூடத்தின் சுவராக இருக்கலாம் என தொல்லியல் துறை இயக்குநர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment