அய்தராபாத், செப்.6 அய்தராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள் ளார். அய்தராபாத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் அய்தராபாத்தில் வரும் 16ஆ-ம் தேதி தொடங்குகிறது. மறுநாள் அதாவது செப். 17ஆ-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள், உயர்மட்ட குழு நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். அன்று மாலை மாபெரும் பேரணியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட உள்ளது" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே அக்கட்சியின் செயற் குழுவில் புதிய உறுப்பினர்களை கடந்த மாதம் 20ஆ-ம் தேதி நியமனம் செய்தார். இதில், சசி தரூர், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 84 உறுப்பினர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment