புதுடில்லி, செப்.5 நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் ' ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஒன்றிய அரசு மசோதா நிறைவேற்றலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. ஒன்றிய அரசின் இந்த திட்டத்திற்கு 'இந்தியா' கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் நாட்டை சர்வாதிகார நாடாக மாற்ற ஒன்றிய அரசு விரும்புவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: ஜனநாயக இந்தி யாவை மெதுவாக சர்வாதிகார நாடாக மாற்ற மோடி அரசு விரும்புகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற தலைப்பில் ஒரு குழுவை உருவாக்கும் இந்த வித்தை இந்தியாவின் கூட்டாட்சி அமைப் பைத் தகர்ப்பதற்கான ஒரு சூழ்ச்சி யாகும். இந்திய அரசமைப்பில் குறைந்த பட்சம் அய்ந்து திருத்தங்கள் தேவைப் படும், மேலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இல் ஒரு பெரிய மாற்றம் தேவைப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மற்றும் சட்டப் பேரவை களின் விதிமுறைகளை துண்டிக்க அர சமைப்புத் திருத்தங்கள் தேவைப்படும். கடந்த 1967-ஆம் ஆண்டு வரை மக்க ளவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டதாக ஒன்றியஅரசு கூறுகிறது. அந்த காலத்தில் மாநிலங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளும் குறைவாக இருந்தன. இப்போது 30.45 லட்சம் உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இந்தியா மிகப்பெரிய ஜனநாயகநாடு. நமது நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த சூழலில் மக்களவை, சட்டப்பேர வைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்தை சீர்குலைப்ப தற்கான சதி ஆகும். ஜனநாயக இந்தி யாவை, சர்வாதிகார இந்தியாவாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது" என்றார்.
No comments:
Post a Comment