புதுடில்லி, செப்.22 நாட்டில் பெரும் பகுதியினராக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) மகளிர் இடஒதுக்கீடு மசோ தாவில் தனி ஒதுக்கீடு வழங்காததால், அந்த மசோதா முழுமையடைய வில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்.
இதுதொடர்பாக மக்களவை யில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் அவர் புதன் கிழமை பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நாடு விடுதலை அடைந்தபோது அதிகார மாற்றம் நடைபெற்றது. ஆங்கிலேயர்களிடம் இருந்த அதிகாரம் இந்திய மக் களுக்கு மாற்றப்பட்டது.
ஒருபுறம் மக்களுக்கு தொடர்ந்து அதிகாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் அதற்கு எதி ராக அந்த அதிகாரத்தைப் பறிக்கும் சிந்தனை உள்ளது. இந்த மோதல் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில், நாட்டில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் வழங்கி யதில் உள்ளாட்சித் துறை மிகப் பெரிய முன்னேற்றமாகும். அந்தத் துறையில் அவர்களுக்கு இடஒதுக் கீடு அளிக்கப்பட்டு, அவர்கள் அரசியலில் பங்கேற்க அனுமதிக்கப் பட்டனர்.
தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றொரு பெரிய முன் னேற்றம். ஆனால், நாட்டில் பெரும் பகுதியினராக உள்ள ஓபிசிக்கு இந்த மசோதாவில் ஒதுக்கீடு இல் லாததால், மசோதா முழுமைய டையவில்லை.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், இந்த மசோதாவை உடனடியாக அமல்படுத்த முடியும். ஆனால், புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தான், இந்த மசோதாவை அமல் படுத்த முடியும் என்று கூறுவது விசித்திரமாக உள்ளது. அவை இரண்டும் தேவையில்லை. மசோ தாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறும்போதெல்லாம், கவனத்தைத் திசைதிருப்பும் புதுப் புது முயற்சிகளில் பாஜக ஈடுபடுகிறது.
நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினராக ஓபிசி சமூகத்தினர் உள்ள நிலையில், பல்வேறு அரசு நிறுவனங்களில் அந்த சமூகத்தினரின் பங்களிப்பு என்ன என்பதை ஆராய்ந்தேன். அப்போது ஒன்றிய அரசின் 90 செயலர்களில் 3 பேர் மட்டும்தான் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதன்மூலம் நாட்டில் எத்தனை ஓபிசிக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங் குடிகள் உள்ளனர் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம்தான் பதில் கிடைக்கும் என்றார்.
‘குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்றிருக்க வேண்டும்’
புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு, பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து புதிய நாடாளுமன்றத்துக்கு அலுவல்கள் மாறியது ஆகிய நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கவில்லை.
இதுதொடர்பாக மக்களவை யில் ராகுல்காந்தி 20.9.2023 அன்று பேசியதாவது:
புதிய நாடாளுமன்றக் கட்டடம் நன்றாகக் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கட்டடம் தொடர் பான நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் ஒரு பெண். பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அலுவல்கள் மாறிய நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது, அவர் இருந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்றார்.
No comments:
Post a Comment