காலை சிற்றுண்டித் திட்டத்தை கொச்சைப்படுத்திய தினமலர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 1, 2023

காலை சிற்றுண்டித் திட்டத்தை கொச்சைப்படுத்திய தினமலர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

சிபிஅய்(எம்) வலியுறுத்தல்!!


 சென்னை,செப்.1- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு,

தினமலர் நாளேட்டின் ஈரோடு, சேலம் பதிப்புகளில் தமிழ் நாடு அரசு துவக்கியுள்ள காலை சிற்றுண்டித் திட்டத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அரசுப்பள்ளிகளில் காலை மற்றும் மதிய உணவு சாப்பிடும் ஏழை, எளிய மாணவர்களை கொச்சைப்படுத்தும் வகையி லும் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளதை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் மதிய உண வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நாட்டிலேயே முதன் முறையாக காலை சிற் றுண்டித் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவக்கியுள்ளது. முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர் களால் துவக்கி வைக்கப்பட் டுள்ள இந்த திட்டம் மாண வர்களிடமும், பெற்றோர்களி டம் பெரும் வரவேற்பை பெற் றுள்ளது. மனித வளர்ச்சி குறி யீடுகளில் தமிழ்நாடு சிறந் தோங்கி இருப்பதற்கு இத்தகைய திட்டங்களும் முக்கிய காரணி யாக அமைந்துள்ளன.

காலையில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள் ளைகள் பெரும்பாலும் சாப் பிடாமல் பள்ளிக்கு வருவதாக வும், இதனால் அவர்களது கற்றல் திறன் பாதிக்கப்படுவ தாகவும் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் இந்தியா முழுவதும் விரிவு படுத்தப்பட வேண்டிய ஒரு திட் டத்தை தினமலர் ஏடு ஊடக நெறிகளுக்கு மாறாக அருவருக் கத்தக்க வகையில் திரித்து வெளியிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத தாகும். 

வக்கிரமும், வன்மமும் நிரம்பி வழியும் இத்தகைய செய் தியை வெளியிட்டதற்காக தின மலர் ஏடு தமிழ்நாட்டு மக்களி டமும், மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டு மென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  வலியுறுத் துகிறது.

 இந்த ஏடு தொடர்ச்சியாக உழைக்கும் மக்களுக்கு எதிராக வும், சிறுபான்மை, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிராகவும், சனாதன அநீதிகளுக்கு ஆதர வாகவும் தொடர்ந்து எழுதி வருகிறது. இந்த ஏடு இத்தகைய விஷமப்போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

-இவ்வாறு கே.பால கிருஷ் ணன் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.


No comments:

Post a Comment