மகளிர் இட ஒதுக்கீடு மசோதா திவாலான வங்கியின் பின் தேதியிட்ட காசோலை போன்றது காங்கிரஸ் விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 23, 2023

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா திவாலான வங்கியின் பின் தேதியிட்ட காசோலை போன்றது காங்கிரஸ் விமர்சனம்

புதுடில்லி, செப்.23 திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை என்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது. 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- 

2010ஆ-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகளிர் மசோதாவையும், 2023ஆ-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மகளிர் மசோதாவையும் ஒப்பிட்டு பார்ப்போம். இரண்டு மசோதாக்களிலும், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டிலும் எஸ்.சி., எஸ்.டி. பெண்களுக்கு உள்ஒதுக்கீடு உள்ளது. ஆனால், முக்கியமான வித்தியாசம் என்னவென் றால், 2010-ஆம் ஆண்டு மகளிர் மசோதா உடன டியாக, எந்த நிபந்தனையும் இன்றி அமல்படுத் துவதாக இருந்தது. ஆனால், 2023-ஆம் ஆண்டு மசோதாவில், மக்கள்தொகை கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையும் நிபந்தனைகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், இம்மசோதா சிக்கலான எதிர்காலத்துக்கு தள்ளி போடப் பட்டுள்ளது. 2010ஆ-ம் ஆண்டு மசோதாவையே கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி நிறைவேற்றி இருக்கலாம். ஏனென்றால், அந்த மசோதா மீது நிலைக்குழு ஆய்வும் முடிந்து விட்டது. ஆனால் அதை செய்யும் எண்ணம் பிரதமருக்கு இல்லை.

தனது கட்சியின் தேர்தல் வெற்றிவாய்ப்பு மங்க தொடங்கும்போதுதான், மகளிர் இடஒதுக்கீடு, பிரதமரின் நினைவுக்கு வந்துள்ளது. அதே சமயத்தில், 2024ஆ-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு அது அமலுக்கு வராதவகையில் அவர் வாய்ப்பந்தல் போட்டுள்ளார்.

 கடந்த 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து இந்தி யாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முன்வந்தபோது, ''இது, திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை'' என்று காந்தியார் சொன்னார். மகளிர் மசோதா தொடர்பான பிரதமர் மோடியின் செயல்பாட் டுக்கு இதுதான் பொருத்தமான வர்ணனை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு இல்லை

சென்னை, செப்.23 தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று 364 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 இதில், யாருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதேபோல, கரோ னாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் சிகிச்சை  பெறுவோரின் எண்ணிக்கை 8ஆக உள்ளது. 

மேலும், கரோனா பாதிப்பால் நேற்று  (22.9.2023) உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment