சிதம்பரம்: பி.முட்லூரில் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 3, 2023

சிதம்பரம்: பி.முட்லூரில் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம்

புவனகிரி, செப். 3 - கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்டம் பி.முட்லூரில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நரேந்திர தபோல்கரின் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.நெடுமாறன் தலைமை வகித்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ஆ.செங்குட்டுவன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுவை இளவரசி சங்கர் நரேந்திர தபால்கர் அவர்களைப் பற்றியும், அறிவியல் மனப் பான்மை ஏன் வளர வேண்டும் என்பதை பற்றியும் சிறப்பாக உரையாற்றினார். இதில் திராவிடர் கழக மாவட்ட இணை செயலாளர் கழக சொற்பொழிவாளர் யாழ் திலீபன் மாண வர்கள் மத்தியில் பரவுகின்ற மூடநம்பிக்கை ஜாதி வெறி தீய பழக்க வழக்கங்கள் இவைகளில் இருந்து மீட்டெடுப்பது எவ் வாறு என்பது குறித்து உரையாற்றினார் மற்றும் பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் கதிரவன் புதுவை ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment