கோவை, செப். 3 - ஈஷாவால் துறவிகளாக்கப்பட்ட கீதா, லதா ஆகிய எங்களது குழந்தைகளை பார்க்க அனுமதி வேண்டுமென நீதிமன்றத்தை பேராசிரியர் காமராஜ் என்பவர் அணுகிய நிலையில், குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்க ஈஷாவிற்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.
ஆரம்பத்தில் குழந்தைகளை பார்க்க அனுமதித்த ஈஷா பின்னாளில் பெற்றோர்களை அனுமதிக்கவில்லை மாறாக பெண் துறவிகளைக் கொண்டே, பிரச்சினை ஏற்படுத்து கின்றார். அதனால் பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டுமென 2017இல் நீதிமன்றத்தை நாடியது ஈஷா. இதனின் எதிரொலியாக வழக்கு நீதிமன்றத்தில் இருக்கின் றது என காரணம் காட்டி பெற்றோரை அனுமதிக்க மறுத்தது.
இந்நிலையில், வயதான காலத்தில் பெற்றோர்களைப் பார்க்கவேண்டியது குழந்தைகளின் கடமை. ஆகையால் குழந்தைகளை பார்க்க எவ்வித தடையையும் ஈஷா ஏற்படுத்தக் கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
No comments:
Post a Comment