சென்னை, செப்.5 சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
"சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. வீட்டுப் படிக்கட்டை தாண்டக் கூடாது என சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தியது. கொசு, டெங்கு, மலேரியா, கரோனா காய்ச்சல் போன் றவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அதுபோல ஒழிக்கப்பட வேண்டியதே சனாதனம்" என்று பேசியிருக்கிறார்.
உதயநிதியின் இந்த விமர்சனத்திற்கு 'இந்தியா' கூட்டணி அமைதி காப்பது ஏன்? என்ற கேள் விக்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் பதில் அளித்து பேசினார்.
அவர் பேசும்போது, ஒவ்வொரு கட்சிக்கும் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு. அனை வருடைய நம்பிக்கையையும் மதிக்கிறோம் என்று கூறினார். சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்றும் அவர் பேசியுள்ளார்.
No comments:
Post a Comment