மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை மகளிருக்கு ஒதுக்கும் அரசமைப்புச் சட்டம் (128-ஆவது திருத்தம்) மசோதா, அண்மையில் நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மக ளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது. அப் போது அதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. அதன் காரணமாக அந்த மசோதாவுக்கு தடை ஏற் பட்டது.
தற்போது அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், பாஜகவினர் கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். அவர்க ளுக்கு தெளிவான நோக்கமோ, கொள்கையோ கிடையாது. அந்த மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், அது 2030-ஆம் ஆண்டுதான் அமல் படுத்தப்படும். 10 ஆண்டுகளில் மோடியோ, அவருடன் உள்ள மற்றவர்களோ இருக்க மாட் டார்கள்.
மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்தாலும், நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இதர பிறப்படுத்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த பெண்களுக்கு மசோதாவில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங் கிரஸ் வலியுறுத்தியது. இதை யொட்டி, அடுத்த ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் மேற் கொள்ளப்படும்.
புதிய நாடாளுமன்றக் கட் டடத்துக்கு அடிக்கல் நாட்டிய போது, அந்த நிகழ்ச்சிக்கு அப் போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப் படவில்லை. அதற்குக் காரணம் அவர்தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்தவர்; தீண்டத்தகாதவர் என்பதாலா?
இதேபோல அந்தக் கட்டட திறப்பு நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகர்கள் உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குடியரசுத் தலைவருக்கு அவமானமாகும்.
குடியரசுத் தலைவரால்தான் மக்களவை கூட்டப்படுகிறதே தவிர, பிரதமரால் அல்ல. ஆனால் குடியரசுத் தலைவரைப் புறக்கணித்துவிட்டு, பெண் களை பெரிதும் மதிப்பதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
எதற்காக தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது? உண்மையில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக விரும்பவில்லை. காங் கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவராக சரோஜினி நாயுடு இருந்தார். ஆனால் 100 ஆண் டுகளில் ஆர்.எஸ்.எஸ். அல்லது பாஜகவுக்கு பெண் ஒருவர் தலைவராகப் பொறுப்பேற்று உள்ளாரா? அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தான், மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment