புதுக்கோட்டை, செப். 21- புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதியை அடுத்த காரையூர் கடை வீதியில் கழகத்தின் சார் பில் கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் போராட் டம் நூற்றாண்டு விழா விளக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கழகத் தின் பொன்னமரா வதி இளைஞரணியைச் சேர்ந்த ப.நாகார்ஜூன் தலைமை வகித்தார். ஒன் றியத் துணைச் செயலா ளர் க.ஆறுமுகம் வரவேற் றார். கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர் சு.தேன் மொழி, பகுத்தறிவாளர் கழகத்தை மாவட்டச் செயலாளர் இரா.வெள் ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக கலை இலக்கிய அணியின் மாவட்டத் துணைச் செயலாளர் பொன்னமராவதி சுப.சின்னையா, அவைத் தலைவர் முகம்மது ரபீக், தகவல் தொழில் நுட்ப அணியைச் சேர்ந்த சு.அசோக் குமார், திரா விடர் கழக திருமயம் ஒன் றியச் செயலாளர் க.மாரி யப்பன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைச் செயலாளர் பி.தாமோத ரன் ம.மு.கண்ணன், செல் லத்துரை உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் திராவி டர் கழகத்தின் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் வைக்கம் போராட்டத் தின் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டிய தன் அவசியம் குறித்தும் வைக்கப் போராட்டத் தின்போது என்னவெல் லாம் நடந்தது என்பது குறித்தும் விளக்கிப் பேசினார்.
அதே போல் முத்தமி ழறிஞர் டாக்டர் கலை ஞர் அவர்களின் சாதனை கள் பற்றியும் அவருக்கு தமிழ்நாடே சேர்ந்து நூற் றாண்டு விழா கொண் டாட வேண்டியதன் அவ சியம் குறித்தும் விளக்கி னார்.
தொடக்கவுரையாற் றிய திமுக இலக்கிய அணி துணைச் செயலா ளர் சுப.சின்னையா பேசு கையில் “பொன்னமரா வதிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வந்தி ருந்தபோது அவருடன் நாங்கள் எல்லாம் அந்த மேடையில் அமர்ந்திருக் கும் வாய்ப்பினைப் பெற் றிருந்தோம்.
தந்தை பெரியாருக்குப் பின் சாமியார்களைப் பற்றியும் அவர்களது மதவாதப் போக்குகளை யும் ஆசிரியர் அவர்கள் தான் விளக்கி வருகிறார் கள்.
அதே போல் கடந்த பத்தாண்டுகளாக மதவா தம் எந்தளவுக்கு நாட் டைச் சீரழித்திருக் கிறது. அதற்கு அரசியல் ரீதியாக எந்தமாதிரியான முன் னெடுப்புகளைச் செய்ய வேண்டும் என்பதையும், மதத்தின் பெயரைச் சொல்லி நாட்டை எந்த ளவுக்கு பொருளாதார ரீதியாகக் கொள்ளைய டித்து விட்டார்கள் என் பதைப் பற்றியும் மக்க ளுக்கு மட்டுமல்ல.
மற்ற தலைவர்களுக் கும் எடுத்துச் சொல்லி வழி நடத்தி வருபவர்தான் ஆசிரியர் அவர்கள் என்று பேசிய தோடு சேது சமுத்திரத் திட்டத் தைச் செயல்படுத்த விடாமல் பொரு ளாதார ரீதியாக வளர விடாமல் மதவாதத்தினால் முடக்கிப் போட்டி ருப்பதால் சுமார் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது” என்று சுட் டிக் காட்டிப் பேசினார்.
முன்னதாக சோம.நீல கண்டன் அவர்களின் மந் திரமா தந்திரமா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக பொன்னமரா வதி ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment