புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சார்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காரை பெரியார் முரசு (எ) ஆறுமுகம் 93 வயதில் முதுமையின் காரணமாக மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தொடர்ந்து இயக்கப் பணிகளிலும், மந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளை தமிழ்நாடு, புது வையில் பட்டிதொட்டிகளில் எல்லாம் நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான வர். 4.9.2023இல் மறைந்த அவரின் இறுதி நிகழ்வு, 6.9.2023 புதன் காலை 10 மணியளவில் காரைக்காலில் அவரது மகன் இல்லத்தில் நடைபெற உள்ளது. பெரியார் முரசுவின் இழப்பு புதுச்சேரி திராவிடர் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். செய்தி அறிந்த புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, நாளை இறுதி நிகழ்வில் புதுவை கழக தோழர்களுடன் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்ய உள்ளார். ஆறுமுகம் என்கிற இயற் பெயரை கவிஞர் கலி.பூங்குன்றன்தான் பெரியார் முரசு என மாற்றியதாக பெருமையுடன் கழகத் தோழர்களிடம் சொல்லிக் கொள்வார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment