புதுடில்லி, செப். 3 - ஒன்றிய அரசின் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட் டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத் தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கான சாத்தியக்கூறு களை ஆய்வு செய்ய, மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஒன்றிய அரசின் இந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது கூட் டாட்சித் தத்துவத்துக்கு எதி ரானது என்றும் அவை குற்றம் சாட்டியுள்ளன.
காங்கிரசு
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்தியப் பிரதேச மேனாள் முதலமைச்சருமான கமல்நாத் செய்தியாளர்களிடம் கூறுகை யில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்காக அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். மேலும் இதற்காக நாடாளுமன்ற இரு அவைகளிலும் மட்டும் மசோதா நிறைவேற்றினால் போதாது. அது மாநில சட்ட மன்றங்களாலும் அங்கீகரிக்கப் பட வேண்டும்' என கூறினார்.
அரியானா, மராட்டியம் போன்ற பாஜக ஆளும் மாநி லங்கள் இதை ஆதரிக்கலாம், ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்காளம் ஆத ரிக்குமா? என கேள்வி எழுப்பிய கமல்நாத், இவ்வாறு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளிப் பது சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட்
"இந்தியா" கூட்டணியால் அச்சத்தில் இருக்கும் பா.ஜனதா, இதில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்த திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு சாடியுள்ளது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்காக குழு அமைத்தி ருப்பது ஜனநாயகத்துக்கு எதி ரானது என்று அக்கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சுஜன் சக்கரவர்த்தி குற்றம் சாட்டி யுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு
இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா கூறும் போது, 'இந்தியாவை ஜனநாய கத்தின் தாய் என பிரதமர் மோடி எப்போதும் கூறி வருகி றார். அப்படியிருக்க பிற அரசி யல் கட்சிகளை கலந்து ஆலோ சிக்காமல் இது தொடர்பாக எப்படி முடிவு எடுக்க முடியும்?' என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆம் ஆத்மி
ஆம் ஆத்மியை சேர்ந்த பிரியங்கா காக்கர், 'எதிர்க்கட்சி களின் ஒற்றுமையால் பா.ஜனதா வினர் பதற்றத்தில் உள்ளனர். முதலில் அவர்கள் எரிவாயு உருளை விலையை குறைத்தார் கள். தற்போது அரசியல் சாச னத்தை திருத்துவது குறித்து ஆலோசிக்கிறார்கள். இதன் மூலம் வருகிற தேர்தல்களில் தாங்கள் வெற்றி பெறமாட் டோம் என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்' என தெரிவித்தார்.
சிவசேனா (உத்தவ்)
சிவசேனா (உத்தவ்) கட்சித் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் கூறும்போது,
'இந்த நாடு ஒன்றாகத்தான் இருக்கிறது. இதில் யாருக்கும் எந்த கேள்வியும் இல்லை. நாங் கள் நேர்மையான தேர்தலைத் தான் கேட்கி றோம், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அல்ல' என கூறினார்.
நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட் டால், அதற்காக கூடுதல் மின் னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்கள் தேவை.
இதற்காக பல்லாயிரக்கணக் கான கோடி ரூபாய் தேவைப் படும். மேலும் கூடுதல் தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு படையினரும் இத்தகைய மாபெ ரும் தேர்தல் திருவிழாவுக்காக பணியமர்த்தப்பட வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment