தமிழ் இலக்கிய நூல்கள் ஆங்கில மொழியாக்கம் : உதவித் தொகை திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

தமிழ் இலக்கிய நூல்கள் ஆங்கில மொழியாக்கம் : உதவித் தொகை திட்டம்

மதுரை, செப்.24 - தமிழ் உள்ளிட்ட 10 மாநில மொழி களில் இருந்து, இலக்கிய நூல்களை ஆங்கிலத் திற்கு மொழியாக்கம் செய்ய உதவித் தொகைத் திட் டத்தை அறிவித்துள்ளது, தி நியூ இந்தியா பவுண் டேஷன்!

1850-ஆம் ஆண்டு முதல் வெளி வந்த இந்திய வரலாற்றின் சமூக - பொருளாதார / கலாச்சார அம்சத்தையும் தெளிவுபடுத்தக் கூடிய - புனைக் கதை இல்லாத, மூல உரை இலக்கியங்கள் மொழியாக்கத் திற்கு ஏற்றவையாகும். இந்த உதவித் தொகைத் திட் டத்திற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31, 2023 கடைசி நாள். 

நூலின் தேர்வு, மொழிபெயர்ப்பின் தரம் மற்றும் ஒட்டு மொத்த திட்ட முன்மொழிவு ஆகியவற்றின் அடிப்படையில் உதவித் தொகைக்குரிய எழுத் தாளர்கள் மற்றும் அவர்கள் மொழியாக்கம் செய்ய வேண்டிய நூல்கள், ஒவ்வொரு மொழியிலும் தேர்வு செய்யப்படும்.

தேர்வாகும் எழுத்தாளருக்கு ஆறு மாதங்களில், மொத்தம் ஆறு லட்ச ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும். ஆண்டு இறுதிக்குள் அவர் தன்னு டைய மொழியாக்கத்தை இறுதி செய்து, நூலை பதிப்பித்து நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த முயற்சி குறித்து தி நியூ இந்தியா பவுண் டேஷனின் நிர்வாக அறங்காவலர் மணீஷ் சபர்வால் கூறுகையில், “மொழிபெயர்ப்பு பெல்லோஷிப்கள் என்பது இந்திய மொழிகளில் உள்ள இந்திய அறிவை ஆங்கிலத்தில் வெளியிடுவதன் மூலம் பரந்த அளவிலான பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியாகும். எங்கள் மொழிகளில் வளமான அறிவுசார் மரபுகள் உள்ளன, அவை அணுகப்படு வதற்கு தகுதியானவை, அதை நோக்கிய எங்கள் முயற்சி இது” என்றார்.

No comments:

Post a Comment