ஜாதி வாரி கணக்கு எடுக்க அஞ்சுவது ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 24, 2023

ஜாதி வாரி கணக்கு எடுக்க அஞ்சுவது ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

ஜெய்ப்பூர்,செப்.24 - ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி அலு வலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று (23.9.2023) நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண் டார். 

அதன்பின்னர் ராகுல் காந்தி, ஒன்றிய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டு களை அடுக்கினார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:- 

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்காக நாடா ளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப் பட்டு உள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் இன்றுகூட அமல்படுத் தலாம். 

ஆனால் தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக் கெடுப்பு என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கு தள் ளிப்போட அரசு விரும்பு கிறது. இந்த ஒதுக்கீட்டை தற்போதே அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. 

இதர பிற்படுத்தப் பட்ட பிரிவினரையும் அதில் சேர்க்க வலியுறுத் துகிறது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு தள்ளிப்போட்டு உள்ளது. பிரதமர் 24 மணி நேரமும் இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்து பேசுகிறார். அவர்களை மதிப்பது பற்றி பேசுகிறார். பிறகு ஏன் ஜாதிவாரி கணக் கெடுப்புக்கு பிரதமர் அஞ்சுகிறார்?

பிரதமரே, ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் நடத்தியது என்பதை உங்கள் அடுத்த உரையில் இந்தியாவுக்கு சொல்லுங்கள். உங்களி டம் புள்ளிவிவரங்கள் உள்ளன. அதை மக்களுக்கு காட்டுங்கள். மேலும் ஜாதி அடிப்படையில் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பி னரை அவமதிக்காதீர்கள். அவர்களை ஏமாற்றாதீர் கள். நாடாளுமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை நான் எழுப்பியதும், பா.ஜனதா எம்.பி.க்கள் எனது குரலை ஒடுக்கப் பார்க் கின்றனர். பிரதமர் மோடிக்கும், அதானிக் கும் உள்ள உறவு குறித்து பா.ஜனதா தொண்டர்க ளிடம் கேட்டால், அவர் கள் நழுவி விடுவார்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.


No comments:

Post a Comment