5.9.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
👉 இந்தியா கூட்டணியின் வாக்குகள், போட்டி வேட்பாளர்கள் மூலம் பிரிக்கப்படாமல் ஒன்று சேர்த்தால், பாஜகவை வெற்றி பெறலாம் என்கிறார் கட்டுரையாளர் ஷிகா முகர்ஜி.
👉 அய்தராபாத்தில் காங். புதிய செயற்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறும். செப்டம்பர் 17இல் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன பங்கேற்கின்றனர். தெலங்கானாவுக்கு 5 தேர்தல் வாக்குறுதிகள் என காங்கிரஸ் அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
👉 ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு வரி வசூலித்து கொடுத்தது ரூ.5 லட்சம் கோடி; ஆனால் மாநிலத்திற்கு திரும்பக் கிடைத்தது ரூ.2 லட்சம் கோடி. மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு என ஆடியோ பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி குற்றச்சாட்டு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉மணிப்பூர் வன்முறை நான்கு மாதங்களாக நடைபெறுகிறது. ஆனால்,ஒன்றிய அரசு இதை முற்றிலும் மறந்து விட்டது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
👉மேனாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹத் ஹபீபுல்லா தலைமையில், பல சிவில் சமூக ஆர்வலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பத்திரங் கள் மற்றும் வாக்காளர் பட்டியல்கள் குறித்த தங்கள் கவ லைகளை முன்னிலைப்படுத்தி இந்திய தேர்தல் ஆணை யத்திடம் ஒரு குறிப்பாணை சமர்ப்பிக்க உள்ளனர்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment