சென்னை, செப். 13- விவசாயிகள் எப்போதுமே கடின உழைப்பை எத்தகைய மண்ணிற்கும் அளிப்பதில் சளைத்தவர்களல்ல. இவர்களுக்கு உதவியாக சோனாலிகா நிறுவனத்தின் ஹெவி டூட்டி டிராக்டர்கள் 20-120 ஹெச்.பி. திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டு, பிரத்யேக மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வந்துள்ளன. இதனால் விவசாயிகள் அவர்கள் எதிர்பார்க்கும் வளம் இயல் பிலேயே அவர்களுக்குக் கிடைக்க வசதியாக அமைந்துள்ளது.
இந்நிறுவனத் தயாரிப்புகளை 15 லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்கள் உலகம் முழுவதும் பயன்படுத்து கின்றனர். இவர்களில் 2.3 லட்சம் விவசாயிகள் உல கெங்கிலும் உள்ளவர்களாவர்.
இந்நிறுவனத்தின் புதிய சாதனை குறித்து இன்டர் நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில்:-
புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வேளாண் துறையில் புதிய நுட்பங்களைக் கொண்டு வருவதை நிறுவனம் மிகவும் மகிழ்ச்சியுடன் மேற்கொண்டு வருகிறது. இதன் வெளிப்பாடாக வந்துள்ள ஒன்றுதான் ஹெவி டூட்டி டிராக்டர்களாகும். ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனம் 10,634 டிராக்டர்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனை எதிர்வரும் விழாக் கால விற்பனை அதிகரிப்புக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 16,300 டிராக்டர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமாக உற்பத்தி செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment