சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 12, 2023

சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்கள்

 *   தந்தை பெரியார் பிறந்த நாளை வீடெங்கும், நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடுவோம்!

* ‘‘தகைசால் தமிழர்'' விருது பெற்ற தமிழர் தலைவருக்கு வாழ்த்தும், பாராட்டும்!

* வைக்கம் நூற்றாண்டு விழா- சேரன்மாதேவி குருகுல நூற்றாண்டு விழாக்கள் வைக்கத்திலும், நெல்லையிலும் கொண்டாடப்படும்!

* லால்குடியில் ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவுச் சின்னம் - ஜாதி ஒழிப்பு மாநாடு!

2024 மக்களவைத் தேர்தலில் மதவெறி, ஸனாதன, பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட உழைப்போம்!

‘‘தகைசால் தமிழர்'' விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் எழுந்து நின்ற கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் (சென்னை, 12.9.2023).

சென்னை, செப்.12 2024 இல் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் ஸனாதன பாசிச மதவெறி பி.ஜே.பி. ஆட் சியை வீழ்த்திட உழைப்போம் என்றும், வைக்கம் நூற் றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுல நூற்றாண்டு விழாக்களை நடத்துவது என்றும், லால்குடியில் ஜாதி ஒழிப்பு வீரர்களின் நினைவுச் சின்னம் நிறுவுவது என்றும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

இன்று (12.9.2023) முற்பகல் 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

இரங்கல் தீர்மானம்

இயக்க ஈடுபாட்டாளர் சிங்கப்பூர் அன்னபூரணி நடராசன் (வயது 89, 19.07.2023), மலேசிய கழகத்தின் மூத்த உறுப்பினர் இரா.நல்லுசாமி (21.7.2023), மலேசிய கழகத்தின் மூத்த தலைவர் சின்னப்பன் (21.7.2023), மதுரை பேராசிரியர் முனைவர் கஸ்தூரிபாய் மனோகரன் (வயது 78, 23.7.2023), இனமானக் கவிஞர் செ.வைர.சிகாமணி (வயது 83, 07.8.2023), பொத்தனூர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் சி.தங்கவேல் (வயது 86, 9,08,2023), கழகக் காப்பாளர் திருச்சி, துப்பாக்கி நகர் சோ.கிரேசி (வயது 76, 20.08.2023), மத்தூர் ஒன்றிய மகளிரணி பொறுப்பாளர் ப.மங்களதேவி (23.08.2023), குடந்தை மாநகர கழக தலைவர் கு.கவுதமன் (வயது 68, 24.08.2023), கழகப் பற்றாளர் துறையூர் வீகேயென் பாண் டியன் (25.08.2023), சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் ந.சி.இராசவேலு (வயது 83, 26.08.2023), திருத்தணி ஒன்றிய கழக அமைப்பாளர் கி.சபரி (29.08.2023), இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி (வயது 54, 04.09.2023), பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் பெரியார் முரசு (எ) ஆறுமுகம் (வயது 93, 04.09.2023), பகுத்தறிவு இயக்குநர்-நடிகர் தேனி மாரிமுத்து (வயது 56, 08.09.2023) ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:

‘‘தகைசால் தமிழருக்கு'' 

வாழ்த்தும் - பாராட்டும்!

தமிழ்நாடு அரசு சார்பில் ‘‘தகைசால் தமிழர் விருது'' பெற்ற தமிழர் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் - ‘விடுதலை' ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் களுக்கு இச்செயற்குழு உளங்கனிந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதுடன்,  நூற்றாண்டுக்கு மேலும் உடல்நலனுடன் வாழ்ந்து நாட்டுக்கும், இயக்கத்திற்கும் வழிகாட்டுமாறு இச்செயற்குழு தன் மனம் நிறைந்த உள்ளத்துடன் தீர்மானிக்கிறது.

திராவிடர் கழகத் தலைவருக்கு ‘‘தகைசால் தமிழர்'' விருது அளித்துச் சிறப்பு செய்த தமிழ்நாடு அரசுக்கு - சிறப்பாக சமூகநீதிக்கான சரித்திர நாயகரான தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இச்செயற்குழு நன்றியறிதலைத் தெரி வித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3 (அ):

ஈரோடு திராவிடர் கழகப் பொதுக்குழுவின் முடிவுகளும் - செயல்பாடுகளும்!

ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப் படையில் கழகப் பணிகளை வேகமாக முடுக்கிவிடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

ஈரோடு பொதுக்குழுவுக்குப் பின் அமைப்பு முறை யில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நல்ல பலனைத் தந்திருப்பது கண்டு இச்செயற்குழு மகிழ்ச்சி அடைவ தோடு, பொறுப்பாளர்கள் மேற்கொண்டு வரும் அயராக் கழகப் பணிகளுக்கு இச்செயற்குழு தன் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அதே வேகத்தில் பணிகள் தொடரட்டும்.

தீர்மானம் 3 (ஆ):

திராவிடர் கழகத்தின் 

அலுவல் ரீதியான பணிகள்

மாவட்டக் கழகத் தலைமை இடத்தில் தங்கள் மாவட்டங்களில் உள்ள அமைப்புகள், நிர்வாகிகள், கழக நடவடிக்கைகள், பொதுவான முகவரிகள், தொலைப்பேசி எண்கள் இவற்றை உள்ளடக்கிய பதிவேடுகளைப் பரா மரிக்குமாறு இச்செயற்குழு கழகப் பொறுப்பாளர்களை வலியுறுத்துகிறது.

மாநில கழக அமைப்பாளர்கள் தாங்கள் மேற்கொள் ளும் சுற்றுப்பயணத்தில் இவை சரி வர நிர்வகிக்கப் படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4:

நாடெங்கும் தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம்!

தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாள் வீடுதோறும், வீதிதோறும் கொள்கைப் பிரச்சாரங்கள், பட ஊர்வலங்கள், ஒலி பெருக்கிகள்மூலம் கழக இசைப் பாடல்கள், தந்தை பெரியார் உரைகளை ஒலி பரப்புதல், கழகக் கொடிகளை ஏற்றுதல், கழகத் தோழர்கள் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் மக்கள் கண்களில் படுமாறு  தந்தை பெரியார் படத்தை அலங்கரித்து வைக்குமாறும் கழகத் தோழர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தந்தை பெரியார் பிறந்த நாள் முதல் பகுத்தறிவுத் தகவல் பலகைகளை நிறுவி, நாள்தோறும் தந்தை பெரியார் கருத்துகள், பகுத்தறிவுத் தகவல்கள், விஞ்ஞான தகவல்களை எழுதி வருமாறு கேட்டுக் கொள் ளப்படுகின்றனர். படிப்பகங்களைத் தூய்மைப்படுத்தி, வாசகர் வருகையை அதிகரிக்கச் செய்யுமாறும் கழகத் தோழர்கள், நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தீர்மானம் 5:

தஞ்சாவூரில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவும், தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் 

மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழாவும்!

முத்தமிழறிஞரும் மானமிகு சுயமரியாதைக்காரரு மான கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையும், கலைஞர் அவர்களுக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகப் பொறுப்பேற்று - நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்று ‘திராவிட மாடல்' ஆட்சியைப் பல் வகையிலும் சிறப்பாகவும், மக்கள் நல அரசாகவும் நடத்தி, நாள்தோறும் சாதனைகளைக் குவித்துவரும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழாவினையும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி (6.10.2023) தஞ்சாவூரில் வெகு எழுச்சியுடனும், பல்வேறு சிறப்புகளுடனும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மாநாடுபோல் நடக்கவிருக்கும் இந்த மாலை நேர பெருவிழாவில் பெருமளவில் மக்கள் திரள ஆவன செய்யுமாறும், ஒத்துழைப்புக் கொடுக்குமாறும் கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6:

‘விடுதலை' சந்தாக்களைப் புதுப்பித்திடுக!

‘விடுதலை' ஆசிரியரின் 60 ஆண்டுகால ஆசிரியர் பணியை  மய்யப்படுத்தி, 60 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக் களின் காலக்கெடு முடியும் நிலையில், அந்தச் சந்தாக் களைப் புதுப்பிக்கும் முயற்சியோடு, புதிய சந்தாக் களையும் சேர்க்கும் பணியில் ஈடுபடுமாறும் இச்செயற் குழு கழகப் பொறுப்பாளர்களை, தோழர்களை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7:

கழக அணியின் பணிகள்!

கழகத்தின் பல்வேறு அணியினரும் தத்தம் அமைப்பு கள் சார்ந்த பணிகளில் தீவிரம் காட்டி அமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும், உறுப்பினர்களை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்றும் கழக அணி யினர்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. அதற் கான தரவுகளையும், ஆதாரங்களையும் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்குமாறு இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

மாநில கழக நிர்வாகிகள், அமைப்பாளர்கள் மாதந் தோறும் தாங்கள் மேற்கொண்ட பணிகளை  தலைமைக் கழகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின் றனர்.

தீர்மானம் 8:

நூற்றாண்டு விழாக்களும் - ஜாதி ஒழிப்பு நினைவுச் சின்ன திறப்பும்!

வைக்கம் நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் நூற்றாண்டு விழாக்களை வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் எழுச்சியுடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

ஜாதி ஒழிப்புக்காக தந்தை பெரியார் ஆணையை ஏற்று அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை திராவிடர் கழகத் தோழர்களால் கொளுத்தப் பட்ட நாளான நவம்பர் 26 ஆம் நாளை ஆண்டுதோறும் ஜாதி ஒழிப்பு நாளாக நடத்துவது என்றும், அப் போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டு சிறை சென்ற வகையிலும், உயிர் நீத்த வகையிலும் முதன் மையான இடத்தை வகிக்கின்ற - ஜாதி ஒழிப்பு வீரர்களை நினைவுப்படுத்தும் வகையில் லால்குடியில் நினைவுச் சின்னம் ஒன்றை நிறுவுவது என்றும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

இந்த ஆண்டைப் பொறுத்தவரையில், லால்குடியில் தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று, ஜாதி ஒழிப்பு வீரர்கள் நினைவுச் சின்னத்தைத் திறப்பதுடன், ஜாதி ஒழிப்பு மாநாட்டையும் அன்று நடத் துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 9:

ஸனாதனம் என்பது பிற்போக்கானது - ஒழிக்கப்படவேண்டியது!

மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தும் ஜாதி அமைப்புகளை, பாலியல் ஏற்றத் தாழ்வுகளை, ஆண்டான் - அடிமைத் தன்மைகளை அடிப்படையாகக் கொண்ட ஸனாதனம் என்பது மனித ஒற்றுமைக்கும், சமத்துவத்துக்கும், சகோதரத்துவத்துக்கும், மனித உரிமகைளுக்கும், மனித நேயத்துக்கும் விரோதமானது என்பதாலும், மானுட சமூகத்துக்கு எதிரான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்துக்கு விரோத மானது என்பதாலும், ஸனாதனம் என்பது சட்டப்படி தடை செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.

ஸனாதனம் என்பது மனித குலத்துக்கு, மானுட சமத்துவத்திற்கு விரோதமானது என்பதால், பக்தி முகமூடி அணிந்து மக்கள் மத்தியில் ஊடுருவியிருப்பதை, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் இந்தப் பிரச்சாரத்தை ஒரு நூற்றாண்டுக்காலமாக செய்து வருவதால்தான் தமிழ்நாடு இந்தியத் துணைக் கண்டத்திலேயே தனித்துவமிக்க முன்மாதிரியான அமைதிப் பூங்காவாகவும் தலை நிமிர்ந்து நிற்கிறது - வளர்ச்சித் திசையில் ஏறுநடையும் போட்டு வருகிறது.

இப்படிப் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் மண்ணில் ஸனாதனப் பிற்போக்குத்தனம் தலையெடுக்க அனுமதிக்கப்படக் கூடாது என்ற தன்மையில், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஸனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று கடந்த 2.9.2023 அன்று சென்னையில் நடைபெற்ற ஸனாதன ஒழிப்பு மாநாட்டில் தெரிவித்துள்ள கருத்து, மனிதநேய அடிப்படையிலும், இந்திய அரசமைப்புச் சட்டப்படியும் வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதும் ஆகும் என்று இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. அவர் உரையைப் பாராட்டி வரவேற்கிறது.

இதற்கு எதிர் வினையாற்றுவது என்ற பெயரால், அவரின் தலையை வெட்டிக் கொண்டு வந்தால், 10 கோடி ரூபாய் பரிசு என்று அறிவித்துள்ள உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார், அதே போல, மன்னார்குடி ஜீயர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் சுவாமிகள் என்பவரும், மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மீது வன் முறையைத் தூண்டும் வகையில் பேசி இருப்பதால், அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தண்டனை அளிக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசை, ஒன்றிய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. இதுகுறித்து காவல்துறைத் தலைமை இயக்குநரிடம் (டி.ஜி.பி.) திராவிடர் கழக சட்டத் துறையின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் இச்செயற் குழு சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் 10:

‘விஸ்வகர்மா யோஜனா' என்ற குலக்கல்வி - தொழில் திட்டம் ஆபத்தானது!

‘‘விஸ்வகர்மா யோஜனா'' என்ற பெயரில் முழுக்க முழுக்க பாரம்பரிய ஜாதி தொழில்கள் என்ற அடிப் படையில், 18 வகை ஜாதிகளைத் தெரிவு செய்து, குலத்தொழில் பக்கம் 18 வயது நிறைந்த இருபால் மாணவர்களை கல்லூரி படிப்புக்குள் நுழைய விடாமல் தடுக்கும் வகையில் ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்து ரூபாய் 13 ஆயிரம் கோடியையும் ஒதுக்கி யுள்ளது.

நாக்கில் தேன் தடவுவது போன்ற இந்த சதித் திட்டத்தை நுட்பமாக அறிந்த நிலையில், திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் 29.8.2023 அன்று கூட்டப் பெற்று, அக்கூட்டத்தில் ஒருமனதாக எடுத்த தீர்மானத்தின்படி, கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி தலைவர்களும், பொறுப்பாளர்களும் பங்கு கொண்ட மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப் பாட்டமும் நடைபெற்றது.

ஒன்றிய அரசு திணிக்கும் இந்தக் குலக்கல்வி - ஜாதி தொழில் திட்டத்தை முற்றிலும் நிராகரிக்கும்படி தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

எங்கெங்கும் இந்தக் குலக்கல்வி - தொழில் திட்டத் தின் ஆபத்து குறித்துப் பிரச்சாரம் செய்யுமாறும் கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 11:

2024 மக்களவைத் தேர்தலும் - 

நமது கடமையும்!

ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில்  இருக்கும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு - இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சம தர்ம - மதச்சார்பற்ற தன்மைகளை முற்றிலும் புறக் கணித்து வருகிறது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்று கூறி, இந்தி யாவில் உள்ள மாநிலங்களின் உரிமைகளையும், தனித் தன்மைகளையும், மாநில இன மக்களின் பண்பாடு களையும் முற்றிலும் ஒழித்து, ஹிந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று வெளிப்படையாகவே கூறி, மீண்டும் பார்ப்பன வல்லாண்மை ஆதிக்கத்தை நிலை நிறுத்தும்  போக்கில் ஒன்றிய அரசு உறுதியாகவே செயல் பட்டு வருகின்றது. இந்நாட்டின் பெரும்பான்மையின மக்களான பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர்களின் உரிமைகளையும், வளர்ச்சியையும் முற்றிலும் ஒழிக்கும் மாபெரும் சதித் திட்டத்துடன் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் ஓரணியில் உறுதியாக நின்று, ‘‘இண்டியா'' என்னும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பெருமளவில் வெற்றி பெறச் செய்து, பாசிச பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவம்) கூட்டணிக்கு மிகப்பெரிய தோல் வியைக் கொடுக்க முன்வரவேண்டும் என்று வாக்காளப் பெருமக்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சி ஒன்றியத்தில் அமையுமானால், அதைவிட நாட்டு மக்களுக்குத் தற்கொலை வேறு ஒன்றும் இருக்க முடியாது என்றும் இச்செயற்குழு எச்சரிக்கிறது.

இந்த நிலையில், திராவிடர் கழகம் - நடக்கவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் பெரும் பணியில் ஈடுபட்டு, மதவாத பி.ஜே.பி. ஆதிக்க சக்தியை வீழ்த்திட அல்லும் பகலும் அயராது திட்டமிட்ட வகையில் பணியாற்றிட வேண்டியது இந்தக் காலகட்டத்தில் திராவிடர் கழகத்தின் மகத்தான கடமை என்பதையும் - இச்செயற்குழு துல்லிய மான தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து செயல்படுவது என்று தீர்மானிக்கிறது.

No comments:

Post a Comment