சென்னை, செப்.1 சென்னையில் உள்ள முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பிரசாந்த் மருத்துவமனைநெல்லூரைச் சேர்ந்த 33 வயது எச்அய்வி தொற்று கொண்டுள்ள ஆணுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்ததன் மூலம் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
எச்அய்வி நோயில் இருந்து ஒரு உயிரை காப் பாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
இந்த எச்அய்வி நோயாளியின் நிலை முதலில் கவலைக்கிடமாக இருந்தது. நோயாளி முதலில் கடுமையான சுவாசப் பிரச்சினைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில், இறுதியில் பிரசாந்த் மருத்துவமனையின் சிறந்த நிபுணர் மருத்துவக் குழு அவரை பரிசோதித்து சிறந்த சிகிச்சை அளித்ததன் மூலம் அவர் குணமடைந் துள்ளார்.
இதுகுறித்து இம்மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணா மற்றும் டாக்டர் அஜித்குமார் ஆகியோர் கூறியிருப்பதாவது:
இம்மாதிரியான சிகிச்சைகள் மிகவும் அரி தானவை. மேலும் நாங்கள் அவர் உயிரை காப்பாற்ற, மருந்து, சிகிச்சைகள், ECMO, உயர்தர சிகிச்சை முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல அணுகு முறையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், நோயாளியின் நிலையை நிவர்த்தி செய்வதற்கான பல சிகிச்சைகள், பாலிநியூரோபதி போன்ற சிக்கல்களை நிர்வகிப் பதற்கு வலுவான ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்பட்டன.
நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்த, துல்லியமான திட்டமிடல் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு போன்றவை நோயாளிக்கு தேவைப் பட்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment