சென்னை,செப்.17- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செய லாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கை வரு மாறு,
அனைத்து ஜாதியி னரு ம் அர்ச்சகராகலாம் என்ற சமூக நீதி சார்ந்த உரிமை சமூக நிலை யிலும், சட்ட ரீதியாகவும் நீண்ட கால போராட் டத்திற்கு பிறகு நடை முறைக்கு வந்துள்ளது.
ஆகம விதிகளை கற்றுத் தேர்ந்தவர்கள் யாரும் அர்ச்சகராகலாம், அதற்கு ஜாதி தடையில்லை என்பதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் பல ஜாதி பிரிவைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர் களாக நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
தற்போது இந்த அர்ச்சகர் பணியில் பாலின சமத்துவம் காணும் முறை யில் ஆகம விதிகளை கற் றுத் தேர்ந்த பெண்கள் மூன்று பேர் க.ரம்யா,
சி.கிருஷ்ணவேணி மற் றும் ந.ரஞ்சிதா - அர்ச்சகர் களாக நியமனம் பெற்றி ருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
அர்ச்சகர் பணி நியம னம் பெற்றுள்ள பெண் அர்ச்சகர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவிப்பதுடன், பெண் களை ஒதுக்கி வைத்து தாழ்வுபடுத்தி, கோயில் கருவறைக்குள் நுழை வதை தடுத்து வரும் ஸனாதன கருத்துகளை நிராகரித்து சமூக நீதி உரிமைகளை நிலை நாட்டுவதில் உறுதி காட்டி வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வர வேற்று, நன்றி பாராட்டு கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment