சேலம் அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரன் (27), எலக்ட்ரீசியன். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பிள்ளையார் சிலைகளை கரைக்க மேட்டூர் காவிரி ஆற்றுகுச் சென்றனர்.அப்போது வீரன் திடீரென தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர்கள் கருமலைக்கூடல், மேட்டூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீரன் உடலை மீட்டனர். பின்னர் உடற்கூராய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கருமலைக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஏற்கெனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிலைகளைக் கரைக்கச்சென்ற போது இரண்டு சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சோகம் அடங்குவதற்குள் மீண்டும் விநாயகர் சிலை களை கரைக்க சென்ற 2 பேர் பலியாகி உள்ளனர்.
No comments:
Post a Comment