‘ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 29, 2023

‘ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது’

கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை,செப்.29- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் ஜாதி வாரி கணக் கெடுப்பு அவசியமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப் பட்டோர் துறை கருத்தரங்கில் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு,

இந்தியாவில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டுமென்ற கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முழு ஆதரவை அளிக் கிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்படி, 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த கணக்கெடுப்பில், ஜாதி,  சமூக பொருளாதார அடிப்படைகளை யும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 2021இல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொட ரப்பட்டது. அதற்கு பதில் மனு தாக்கல் செய்த ஒன்றிய அரசு, 2021  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தா லும், அதில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாட் டோம் என்று தெரிவித்துள்ளது. 1881 முதல் 1941 வரை பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக் கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெ டுப்பும் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு சுதந்திர இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நிறுத் தப்பட்டு விட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப் பட்டது. 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, 118 கோடி மக்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டன. 2014ல் ஆட்சிக்கு  வந்த பாஜக, ஜாதி மற்றும் பொரு ளாதார அடிப்படையிலான விவ ரங்களை வெளியிட மறுத்து விட்டது. அதன் தொடர்ச்சி யாக, தற்போது ஜாதிவாரி கணக் கெடுப்பை நடத்த மறுக்கிறது. 1931ஆம் ஆண்டு ஜாதிவாரி மக்கள்  தொகை கணக்கெடுப்பில், பிற்படுத் தப்பட்ட மக்கள் 52 விழுக்காடாக இருந்தனர். அதனை  அடிப்படை யாகக் கொண்டு மண்டல் கமிஷன் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது. மண்டல் கமிஷன் காலத்தில் கணக்கிட்டிருந்தால் பிற்படுத்தப்பட்டோர் எண் ணிக்கை 80 விழுக்காடு வரை இருந் திருக்கும். அப்படியானால், 40 விழுக்காடு வரை இடஒதுக்கீடு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்கப் படு கிறது.

ஆனால், மக்கள்தொகையில் 85-90 விழுக்காடு இருப்பார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் சற்றேறக் குறைய இதே அளவில் பிற்படுத்தப் பட்ட மக்கள் இருப்பார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால், பிற்படுத்தப் பட்டோரின் உண்மை யான எண்ணிக்கை தெரிந்துவிடும். மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கேட்டு மக்கள் போராடு வார்கள். எனவே, பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு கிடைத்து விடக் கூடாது; கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேறிவிடக் கூடாது என்பதற்காகவே பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது. இதுஒருபுறம் இருக்க, சட்டப்படி வழங்கப்பட் டுள்ள இடஒதுக்கீட்டையும் கூட ஒன்றிய அரசு செயல்படுத்த மறுக்கிறது.  ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில், வேலை வாய்ப் புகளில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடும், எஸ்சி/எஸ்டி மக்களுக்கு 23 விழுக்காடும் ஒது க்கீடு வழங்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், ஜாதி உணர்வு மேலோங்கிவிடும் என்று திசை திருப்புகிறார்கள்.

No comments:

Post a Comment