'திராவிட மாடல்' ஆட்சியின் பெருமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

'திராவிட மாடல்' ஆட்சியின் பெருமை

உலகில் ஒரு தலைசிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்:

1. இங்கு 9 விமான நிலையங்கள் உள்ளன. அதில் 4  பன்னாட்டு முனையங்கள் உள்ள விமான நிலையங் களாகும்.

2. சுமார் 36,000+ பெரிய நிறுவனங்கள் உள்ளன.

3. உலகில் முதலில் தோன்றிய மாநகரம் என்று கூறப்படும் மதுரை இங்கு தான் உள்ளது. சில்க் பாதையில் மேற்குலக வணிகர்களும், கிழக்குலக வணிகர்களும் சந்தித்துக்கொள்ளும் பழங்கால நகரம் மக்கா என்றால், கடல் சார் பாதையில் சீன, யவன, அரபிய, எகிப்திய வணிகர்கள் சந்திக்கும் இடம் மதுரை ஆகும்.

4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே.

5. உலகில் உள்ள  மிகப் பெரிய தொழில் அமைப்புகள் பலவற்றின் தலைவர்கள் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த நாடே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.

7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலத்தில்தான்.

8. இமெயில் கண்டுபிடித்தது இந்த மாநிலம் தான். இதுவே உலகம் விரைவாக செயல்படக் காரணமாக அமைந்தது.

9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான்

10. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலமும் இதுவே ( லீஹ்பீக்ஷீஷீ, ஷ்வீஸீபீ, sஷீறீணீக்ஷீ, ஜிவீபீமீறீ... மீநீt ).

11. உலகின் மிகவும் பழைமையான மொழியாக அன்று முதல் இன்று வரை மிகச்சிறு மாறுதல்களோடு பேசப்படும் மூத்த மொழியாம் தமிழ்மொழியைக் கொண்டது இந்த மாநிலம்.

12. இந்த மாநிலமே உலகில் முதல் முறையாக மொழியை தனது பெயராகக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு.

மொழியோடு சேர்த்து பெயரைச் சூட்டும் ஒரே இனம் தமிழினம் வாழும் மாநிலம் தமிழ்நாடு என்பது இங்கே சிறப்பானதாகும்.

 13. சதுரங்கத்தின் தாயகம் இந்த நாடுதான் ஆகையால் தான் இங்கு பிரக்ஞானந்தாக்கள் உருவாகின்றனர்.


No comments:

Post a Comment