அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு முதலமைச்சர் பாராட்டு!
சென்னை, செப்.26- இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஓதுவார் பணியிடங்களுக்கு பெண் ஓதுவார்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப் பட்டது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் ‘‘பெரியாரின் நெஞ்சில் நமது ‘திராவிட மாடல்' அரசு வைக்கும் ‘பூ’ இது’’ என்றும், ‘‘அமைச்சர் பி.கே.சேகர் பாபுவை வாழ்த்துகிறேன்!’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றிய விபரம் வருமாறு:
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை கலைஞர் அகற்றினார்- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம் கொண்டு வந்து!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கனவை முத் தமிழறிஞர் கலைஞர் முன்னின்று செயல்படுத்திய திட்டம். இவ்விருவரின் கனவை நனவாக்கும் வகையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் காட்டிவிட்டார்.
கோயில்களில் பயிற்சி பெற்ற
24 அர்ச்சகர்கள் நியமனம்!
14.8.2021 அன்று சென்னை கபாலீசுவர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கோயில்களில் பணிபுரிவதற்காக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின்கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்கு கோயில்களில் பணிபுரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
அதே போன்று கோவில் கருவறைக்குள்ளும் பெண்கள் போகும் வகையில் முதலமைச்சர் முன் னெடுப்பை எடுத்துள்ளார். 29 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
முதன் முதலாக
பெண் ஓதுவார்கள் நியமனம்!
வரலாற்றில் பதிவு செய்யத் தக்க வகையில் பெண் ஓதுவார்களுக்கும் பணி நியமனை ஆணையை வழங்கினார் முதலமைச்சர்.
நாட்டிலேயே பெண்கள் ஓதுவராக நியமிக்கப் பட்டது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தான் தான் வழிகாட்டி என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதன் மூலமும் நிரூபித்துக் காட்டி யிருக்கிறார்.
பெண் ஓதுவார்களில் சுகாஞ்சனா என்ற பெண் ஓதுவார் ஒருவருக்குத் தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கோயிலில் ஓதுவராக நியமனம் செய்யப்பட்ட பணி ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.
இவை எல்லாம் தந்தை பெரியார் கனவு - இன் றைக்குத் திராவிட இயக்க வழித்தோன்றல்கள்மூலம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக சமதர்ம கோட்பாடுகள் மூலம்வழங்கிய உரிமைகள் இன்று அனைத்து மக்களுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
மொத்தம் 10 பெண் ஓதுவார்கள்!
இந்நிலையில் கோயில்களுக்குத் தேர்வு செய் யப்பட்டுள்ள 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகளை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று (25.9.2023) வழங்கினார். அதிலும் ஆணுக்குப் பெண் நிகர் என்பதை நிரூபிக்கின்ற வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்' ஆட்சியில் ஏற்கெனவே 5 கோயில்களில் பெண் ஓதுவார்கள் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்ற 15 ஓதுவார்களில், 5 பெண் ஓதுவார்கள் நியமனம் என்பது உண்மை யிலேயே பெரும் சாதனைக்குரியதாகும். இதுவரை நியமிக்கப்பட்டுள்ள 10 பெண் ஓதுவார்களுமே திராவிட முன்னேற்ற கழக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:-
சமத்துவத்தை நோக்கிய தமிழினத்தின் பய ணத்தில் மற்றுமோர் மைல்கல்! திராவிட முன் னேற்றக் கழகத்தின் சமூகநீதிச் சாதனை மகுடத்தில் மற்றுமோர் வைரம்!
சுருங்கச் சொன்னால், திராவிட இயக்கப் பற்றா ளர்கள் புகழ்வது போல், இது “பெரியாரின் நெஞ்சில் நமது ‘திராவிட மாடல்' அரசு வைக்கும் ‘பூ’!”
No comments:
Post a Comment