சென்னை, செப். 24 - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க., பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவ - மாணவிகளுக்கிடையே மாநில அளவிலான மாபெரும் பேச்சுப் போட்டி நடத்தப் படுகிறது. இதில் முதல் பரிசாக ரூ. 5 லட்சம் உட்பட, மொத்தம் ரூ. 60 லட்சம் வரை மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க., பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பி. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் தொழில் துறை மற்றும் பொறியியல் துறை வளர்ச்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவரது ஆட்சியில் தொழில் துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது. அதேபோல, தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு தொழில் துறை உச்சத்தைத் தொட் டுள்ளது. குறிப்பாக, பொறியாளர் களின் பங்களிப்புடன் பன்னாட்டு அளவில் தமிழ்நாடு தொழில் துறையில் முன்னிலை வகிக்கிறது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வெகு விமரி சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி, தி.மு.க., பொறியாளர் அணி சார்பில் மாபெரும் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது. இதில், இளங்கலை - முதுகலை பொறியியல், பாலி டெக்னிக் மற்றும் அய்.டி.அய்., மாணவ - மாணவிகள் பங்கேற்க லாம்.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாண வர்கள், தி.மு.க., பொறியாளர் அணி வெளியிட்டுள்ள க்யூ.ஆர். கோடினை (QR Code) ஸ்கேன் செய்தோ, அல்லது <https://bit.ly/44GhVjL> என்ற லிங்க்-அய்க் கிளிக் செய்தோ, dmkenggwing@gmail.com <mailto:dmkenggwing@gmail.com> என்ற மின்னஞ்சல் முக வரியின் வாயிலாகவோ, தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment