பருவமழை முன் எச்சரிக்கை ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

பருவமழை முன் எச்சரிக்கை ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன

சென்னை, செப். 20- தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

 இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மழைநீர் வடிகால் கட்டுமானப் பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி, நீர்நிலைகள், கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

No comments:

Post a Comment