சேலம், செப். 5- சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் “டாக்டர் நரேந்திர தபோல்கர்”நினைவு நாளை முன்னிட்டு ‘தேசிய அறிவியல் மனப்பான்மை நாள்’ கருத்தரங்கம் - டாக்டர் நரேந்திர தபோல்கர் படத்திறப்பு விழா கடந்த 26.8.2023 சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி ராஜூ தலைமையில் நடைபெற்றது. அவர் தனது தலைமையுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கைக்கு இணங்க கருத்தரங்கமும் படத்திறப்பும் நடக்கிறது என்றும், ’70 களில் தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தை தோற் றுவித்தது குறித்தும்,அதன் செயல்பாடுகள் குறித்தும்,பயன்கள் குறித்தும், மூடநம்பிக்கைகளை ஒழிப்பு பற்றியும் எடுத்து ரைத்தார்.
டாக்டர் நரேந்திர தபோல்கர் படத்திறப்பு
சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டசபை உறுப்பினருமான இரா. இராஜேந் திரன், டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் உருவப் படத்தை திறந்து வைத்து கருத்துரை வழங்கினார்.
அவர் தனதுரையில், தபோல்கர் ஒரு சிறந்த மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி என்றும், பில்லி சூனியம் மூடநம் பிக்கைகள் இவைகளுக்கு எதிராக மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்தார் என்றும், மக்களிடம் மலிந்து கிடந்த மூடநம்பிக்கைகளால் மனித குலத்திற்கும், அதன் முன்னேற் றத்திற்கும், எவ்வளவு தடையாக உள்ளது என்பதை வலி யுறுத்தி பேசி வந்தார் என்றும் , இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சங்பரிவார் கூட்டம், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அவரை கொலை செய்தார்கள் என்றும், ஆனால், தமிழ் நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் தனது 95 வயது வரை மக்களின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். அதுவல்லாமல், தமிழ் நாட்டு மக்களின் கல்வி, உரிமை, வேலை வாய்ப்பு, மகளிர் முன்னேற்றம் குறித்தும் பேசி வந்தார். அவர் வழி வந்த அறிஞர்அண்ணா, டாக்டர் கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரை அனைவரும் பெரியாரின் கருத்துகளை, கொள்கைகளை அரசியல் ஆதாரங்களை பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்து வந்தார்கள் எனவும் இன்றளவும் சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது எனவும் கூறி தனது கருத்துரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து பகுத்தறிவாளர் ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ் பிரபாகரனும், பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா.சரவணனும் உரையாற்றினார்கள்.
சிறப்புரை
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை ஆற்றினார்.
அவர் தம் உரையில் அறிவியல் அறிஞர்கள் பலர் உலகம் உருண்டை என்று கூறியபொழுது மதத்திற்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசி அவர்களுக்கு மரண தண்டனை அளித்தார்கள். அதே மதவாதிகள் சுமார் 350 ஆண்டுகள் கழிந்த நிலையில், இன்று தாங்கள் செய்தது தவறு என்று வருந்தியும், அறிவியல் கூற்றே உண்மை என ஏற்றுக்கொண்டு மதம் மண்டியிட்ட வரலாற்றையும் எடுத்துரைத்தார்.
மூட நம்பிக்கையை வளர்த்திடும் பெற்றோர்
மேலும் பெற்றோர்கள் மூடநம்பிக்கையை பிள்ளைகளிடம் வளர்க்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தினார். பெற்றோர் கள் மரம் வளர்ப்பது நல்லது. அது நல்ல காற்றையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் என்று தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்காமல், அது கடவுள்! சாமி! அதை வணங்கு!! என சொல்லிக் கொடுத்தால், பிறகு அந்த மனிதனே, அந்த மரங்களை வெட்டுகிறான். பாதுகாக்க வேண்டிய தண்ணீரை அசிங்கப்படுத்துகிறான். கங்கை ஆற்றை தூர் வாரினால், டன் கணக்கில் துணிகள் இருக்கிறது. ஆடைகளை ஆற்றிலேயே விட்டுவிடவேண்டும் எனும் மூடநம்பிக்கை, அந்த கங்கையை மாசு படுத்தியது என்றும் ஜெர்மனியில் ஆறுகள் மிகவும் சுத்தமாக உள்ளது ஏனென்றால் அங்கு குழந்தை களுக்கு சுத்தமாக வைத்திருப்பதைப் பற்றி அந்த பெற் றோர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்றும், அவர்கள் அறிவியல் உணர்ந்து அறிவியல் மனப்பான்மையுடனும் இருக்கிறார்கள் என்றார்.மூட நம்பிக்கை உள்ள மேலை நாடுகளில், வளர்ந்த நாடுகளில் தாம் வசிக்கும் வீடுகளுக்கு ‘எண் 13’ கதவு எண்ணாக வைக்க மாட்டார்கள் என்றும், அவர்கள் பேய்! கறுப்பு! எனவும், நாம் கற்பித்த பேய்! வெள்ளை எனவும், புனிதம் என்பதை விட தூய்மைக்காக என்று மக்களை பண்படுத்தவேண்டும் எனவும் கூறினார்.
நரபலி மூடநம்பிக்கை
தத்துவ வாதியாக போற்றப்பட்ட சாக்ரடீஸ் கூட, பெண் களுக்கு 2 பல் குறைவு, பெண்களுக்கு அறிவு குறைவு என நம்பியவர்தான் என்றார். இன்றைக்கும் ஜாதி தீண்டாமை நாட்டில் உள்ளதே என்றார்.காணாமல் போன 5 வயது குழந்தை பிணமாக கண்டெடுக்கப்பட்டது. உயிருடன் இருந்த குழந்தையின் உடலில் துளை போட்டு இரத்தம் சொட்ட சொட்ட நரபலி கொடுத்துள்ளார்கள். சீரியல்களில் புதுசு புதுசா மூட நம்பிக்கையை காட்டுகிறார்கள். அதனால் மக்கள் ஊர் ஊராக கோயிலுக்கு சென்று வருகிறார்கள். பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி விரதம் போன்றவை கவுரவமாக கருதப்படுகிறது. ராகு காலம், குளிகை, எமகண்டம், சந்திராஷ் டமம் மற்றும் பண்டிகைகள் இவற்றால் சரிபாதி நேரம், நாள், மாதம், வருடம் வீணடிக்கப்படுகிறது. சோதிடன் சொன்னான் என்பதற்காக மனைவியை சாக்கடைத் தண்ணீரில் படுக்க வைக்கிறான் - பிள்ளை பேற்றிற்காக! இதுவெல்லாம் வடக்கில் சர்வ சாதாரணம், மிகவும் அதிகம். ஆனால் தமிழ்நாட்டில், இதுபோன்ற மூட நம்பிக்கைகள் மிகவும் குறைவு. அதற்கு காரணம், தந்தை பெரியார்! அவர் வழியில் தமிழர் தலைவர், திராவிட இயக்கங்கள்.
தந்தை பெரியாருக்கு வந்த எதிர்ப்புகள்
தந்தை பெரியார் மேடையில் பேசும்போது கல்லால் அடித்திருக்கிறார்கள் செருப்பு வீசி இருக்கிறார்கள் மலத்தை அள்ளி வீசி இருக்கிறார்கள். துணியில் பட்ட மலத்தை அப்படியே வைத்துக் கொண்டு இரண்டு மூன்று மணி நேரம் பேசிவிட்டு கீழே வந்துதான் மலத்தை துடைத்தார் பெரியார்.
“ஏன் இப்படி உழைக்க வேண்டும்?” என்று கேட்டவர் களுக்கு, “மலம் என்றும் பாராமல், அதை எடுத்து அடிக் கிறார்களே! அவர்கள் திருந்த வேண்டுமே என்பதற்காகவே உழைக்கிறேன்” என்றார் அவர்களிடம் பெரியார்.
துறவிக்கு வேந்தன் துரும்பு
“துறவிக்கு வேந்தன் துரும்பு என்பார்கள். ஆனால், அந்த துறவிக்கும் ஓர் ஆசை உண்டு! தான் மறைந்த பிறகு சொர்க் கம் செல்ல வேண்டும் என்று!! ஆனால், எனக்கு அந்த ஆசை இல்லை. நானோ, என் தொண்டர்களோ அந்த துறவியை விட மேலானவர்கள்” என்றார் பெரியார். 95 வயதிலும் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்று கூட்டம் பேசிவிட்டு வந்தார்.
நன்றி எதிர்பாராத தொண்டு
நான் எதையும் எதிர்பார்த்து இந்த தொண்டை மேற்கொண்டு செய்யவில்லை. நான் மொட்டை மரம் - நான் வெறும் சுவர் - நீ சாதிக்க வேண்டும் - யோசிக்க வேண்டும் - நானே சொல்லியிருந்தாலும் அதை நம்பக்கூடாது - உனது அறிவுக்கு சரியாக பட்டதை செய் என்று பெரியார் கூறியதை நினைவூட்டினார்.
மகாராட்டிரம்
1860-1870களில் மகாத்மா ஜோதி ராவ் கோவிந்தராவ் பூலே மற்றும் அவரது வாழ்விணையர் சாவித்ரிபாய் பூலே சமூக சீர்திருத்தவாதிகளாக மக்கள் கல்வி அறிவு வளர பாடுபட்ட வர்கள். அவர் தந்தை அவரை வீட்டில் சேர்க்கவில்லை. அப்போது, அவருக்கு உதவியாளராக இருந்த முஸ்லிம் உஸ்மான் ஷேக், வீட்டில் இருந்து பணியாற்றினார் என்றும், தொடர்ந்து அம்மாநிலத்தில் அண்ணல் அம்பேத்கர் தோன்றி நமக்காக பாடுபட்டார் என்றும் கூறினார்.
டாக்டர் நரேந்திர தபோல்கர்
மகாராட்டிரா மாநிலத்தில் 1981 இல் மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடியவர். மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவர வேண்டுமென்று போராடினார். 2013 ஆம் ஆண்டு சனாதன சங்கம் என்ற அமைப்பு அவரை விரட் டியது. ஆனாலும், தொடர்ந்து அவர் அஞ்சாமல் பேசினார். அதனால் மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இன்று வரை உண்மையான கொலையாளிகள் தண்டிக்கப் படவில்லை.
அறிஞர் பெருமக்கள்
மேற்கு வங்கம் கோவிந்த் பஞ்சாரே - இவர் ராமாயணம் கீதை பற்றிய ஆராய்ச்சி செய்தார். கருநாடகம் கல்பூர்கி - கவுரி லங்கேஷ் போன்றவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். இதுதான் அரச பயங்கரவாதம் என்று 2014ஆம் ஆண்டு மகாராட்டிரா அரசு மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தது. இதனால் வெல்வது அறிவுதான்
இந்திய அரசியல் சட்டம் பிரிவு 51 A(h)
அறிவியல் மனப்பான்மை வளர்த்தல்
மனிதநேயம் காத்தல்
கேள்வி கேட்கும் உரிமை வளர்த்தல்
சீர்திருத்தத்திற்கு உட்பட காத்திருத்தல்
ஆகியவை இந்திய மக்களின் கடமை ஆகும்
வேதமா? அறிவியலா?
எதைக் கொடுத்தாலும் எல்லாம் வேதத்தில் உள்ளது என்கிறார்கள். விமானம் வேதத்தில் இருந்தது என்றால் உண்மையான விமானம் ஏன் உண்மையில் உருவாக்கப் படவில்லை. இவருக்கு, எங்கள் வீர முத்துவேல் தான் சந்தி ராயன் சாதனை படைத்துள்ளார் என காட்ட வேண்டியுள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்
கடவுளை மறுத்த பெரியார் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று போராடி, உயர் நீதிமன்றம் சரியாக தீர்ப்பு வழங்கியது! “ஜாதி முக்கியமில்லை, ஆகமம் தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்” என்று. இந்த சேலம் குருக்கள்தான் உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதி மன்றமும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது என கூறினார்.
அறிவியல் மனப்பான்மை
எனவே, அறிவியல் போதிப்பது மட்டுமல்ல, மக்களுக்கு அறிவியல் மனப்பாண்மையை வளர்க்க வேண்டும். ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கும் திறன் வளர வேண்டும். அதற்காக பகுத்தறிவாளர் கழகம் பாடுபட வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்
புதிய உறுப்பினர்கள்உரை தொடங்கும் முன், பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்த ஆசிரிய பெருமக்கள்: அ. சரவணன், கு. விஜய குமார், பா. சரவணன், ச.நித்தியானந்தம், மா. சரவணன், நா.சரவணன், க. வினோத்குமார், ம. இராஜூ, ப. மணிகண்டன், அ. ச. அருண்பிரசாத், ஆகியோர்களுக்கு பயனாடை அணி வித்து வரவேற்று வாழ்த்தினார்! தலைமைக் கழக அமைப் பாளர் கா.நா.பாலு வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி. அன்புமதி, சேலம் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் அ.ச. இளவழகன், செயலாளர் பா. வைரம், மாநகரத்தலைவர் அரங்க . இளவரசன், செயலாளர் ச. பூபதி ஆகியோர் முன் னிலை வகித்தனர். பெருந்திரளாக புதிய தோழர்கள் பங் கெடுத்தனர்.
மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் செயலாளர் சி.மதியழகன் நன்றி கூற கருத்தரங்கம் 2:00 மணியளவில் இனிதே முடிந்தது.
No comments:
Post a Comment