மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேச்சு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 25, 2023

மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேச்சு!

 மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடகமாடும் பி.ஜே.பி.க்கு 

மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!

 புது­டில்லி, செப். 25 - தேர்­தலை மன­தில் வைத்து அவ­ச­ர­க­தி­யில் மக ளிர் இட­ஒ­துக்­கீடு மசோ­தாவை நிறை வேற்­றி­யுள்ள பி.ஜே.பி.க்கு வரும் தேர் ­த­லில் மக்­கள் சரி­யான பாடம் புகட்­டு ­வார்­கள் என மாநி­லங்­க­ள­வை­யில் தி.மு.க. உறுப்­பி­னர் டாக்­டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசி­னார்.நாடாளு­மன்­றம் மற்­றும் சட்­ட­ மன்­றங் க­ளில் மக­ளி­ருக்கு 33 சத­வி­கித இட­ ஒ­துக்­கீடு அளிக்­கும் சட்­டத் திருத்த மசோதா மீதான விவா­தத்­தில் கலந்­து­ கொண்டு அவர் பேசி­ய­தா­வது:

பெண்­க­ளுக்கு அதி­கா­ர­ம­ளிக்­கும் விடயத்­தில் உல­கத் தலை­வர்­க­ளுக் கெல்­லாம் முன்­மா­தி­ரி­யா­க­வும், அடை ­யா­ள­மா­க­வும் திகழ்ந்த எங்­கள் தலை வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் மற்­றும் தி.மு.க. தலை­வர் தள­பதி மு.க. ஸ்டாலின் ஆகி­யோ­ரால்­தான் இந்த அவை­யில் உறுப்­பி­ன­ரா­கிப் பேசும் வாய்ப்பு எனக்­குக் கிடைத்­தது. தி.மு.கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் சார்­பில் இந்த மக­ளிர் இட ஒதுக்­கீடு மசோ­தாவை நேற்­றும் இன்­றும் 

என்­றும் என எப்­போ­தும் ஆத­ரிக்­கி றோம்.

சமூ­கப் புரட்­சி­யா­ள­ரான தந்தை பெரி­யார் பெண் உரி­மைக்­காக ஒரு நூற்­றாண்­டுக்கு முன்பே போரா­டி ய­வர். பெண் அடி­மைத்­த­னத்தை ஒழித்­தால்­தான் ஒரு சமு­தா­யம் நிஜ மான முன்­னேற்­றத்தை அடைய முடி யும்; பெண்­க­ளி­டம் சமை­யல் செய்­யும் கரண்­டி­யைப் பிடுங்­கி­ விட்டு புத்­த­கம் கொடுத்­தால் போதும் என்று சொன்ன ­வர் பெரி­யார். மக­ளி­ருக்­கான இட­ஒதுக்­கீடு என்­பது சலுகை அல்ல பெண்­க­ளின் உரிமை என்­பதை உணர்ந்த இந்­தத் தலை­வர்­க­ளின் முன்­னெ­டுப்­பால் பெண்­க­ளுக்­கான முக்­கி­யத்­து­வத்­தை­யும் முன்­னு­ரி­மை­யை­யும் பன்­னெ­டுங் கால­மாக வழங்கி வரு­கி­றது தமிழ்­நாடு.

ஆண்­க­ளுக்கு இணை­யாக பெண் ­க­ளுக்­கும் சம­வாய்ப்பு வழங்­கு­வதை நமது அர­ச­மைப்­புச் சட்­டம் அடிப் படை உரி­மை­யாகவே வ­லி­யு­றுத்­திச் சொல்­கி­றது. இந்­தச் சட்­டம் உரு­வா வ­தற்கு முன்பே பெண்­க­ளின் முக்­கி யத்­து­வத்தை உணர்ந்து சென்னை மாகா­ணத்­தில் 1921ஆம் ஆண்டே பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை அளித்த இயக்­கம்­தான் நீதிக்­கட்சி. அதன் தொடர்ச் ­சி­யாக 1927இல் டாக்­டர் முத்து­லட்­சு­மி­ ரெட்டி சட்­டப் பேர­வைக்கு முதல் பெண்­ம­ணி­யா­கத் தேர்­வா­னார்.

1996இல் தி.மு.க. அங்­கம் வகித்த ஜன­நா­யக முற்­போக்­குக் கூட்­ட ணி­யின் முத­லா­வது அர­சு­தான் இந்த மக­ளிர் இட­ஒ­துக்­கீடு மசோ­தாவை மாநி­லங்­க­ள­வை­யில் அறி­மு­கம் செய் தது. தொடர்ச்­சி­யாக 2010ஆம் ஆண்டு இதே மாநி­லங்­க­ள­வை­யில் அதை அறி­மு­கம் செய்து நிறை­வேற்­றி ­ய­தும் அய்.மு. கூட்­டணி அர­சு­தான். அந்த மசோ­தா­வைத்­தான் தங்­கள் பத­விக் காலத்­தில் ஒன்­பதரை ஆண்­டு­கள் வீண­டித்த பி.ஜே.பி. அரசு இப்­போது மீண்­டும் கொண்­டு­வந்­தி­ருக்­கி­றது.

வேளாண் மசோதா, சி.அய்.ஏ. மசோதா, காஷ்­மீர் தொடர்­பான மசோதா, என சர்ச்­சைக்­கு­ரிய பல மசோ­தாக்­களை நிறை­வேற்ற முடிந்த இந்த அர­சால் முக்­கி­யத்­து­வம் நிறைந்த இந்த மக­ளிர் இட­ஒ­துக்­கீட்டு மசோ­தாவை மட்­டும் உரிய நேரத்­தில் நிறை­வேற்ற முடி­ய­ வில்லை.

பெண்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளிப்­ப­தில் தி.மு.க. எந்­த­ள­வுக்­கு ­மனப் பூர்­வ­மாக இருந்து செய­லாற் றி­யது என்­ப­தற்கு சில உதா­ர­ணங் க­ளைச் சொல்­கி­றேன்... உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் பெண்­க­ளுக்கு 33 சத­வி­கி­தம் இட­ ஒ­துக்­கீடு அளித்து சட்­டம் நிறை­வேற்றி பின்­னா­ளில் அது 50 சத­வி­கி­த­மாக உயர வழி­வ­குத்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். சொத்­தில் பெண்­க­ளுக்கு சரி­பாதி உரிமை அளித்து பொரு­ளா­தார ரீதி யாக அவர்­களை பாது­காப்­பாக வைத் தி­ருந்­த­தும் அவரே. பெண்­க­ளுக்கு கல்வி உத­வித்­தொகை, திரு­மண உத வித் தொகை, பேருந்­து­க­ளில் கட்­ட ண­மில்லா பய­ணச் சலுகை என பல திட்­டங்­களை அமல்­ப­டுத்தி வரு­வது தி.மு.கழக அர­சு­கள்­தான்.

அறி­ஞர் அண்ணா, தலை­வர் கலை­ஞர், தள­பதி மு.க. ஸ்டாலின் என அனை­வ­ரது ஆட்­சி­யி­லும் பெண் க­ளின் முன்­னேற்­றத்­துக்­கான மகத் தான பல நலத்­திட்­டங்­கள் அமல்­ படுத்­தப்­பட்­டன. இந்­தி­யா­வி­லேயே முதல் முறை­யாக குடும்­பத் தலை­வி க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் உரி மைத் தொகை வழங்­கும் தள­பதி மு.க. ஸ்டாலி­னின்­ம­கத்­தான திட்­டத்தை சமீ ­பத்­திய உதா­ர­ண­மா­கச் சொல்ல­லாம்.

அந்த வகை­யில் பெண்­க­ளுக்­கான உரி­மை­க­ளைத் தந்து சமூ­கத்­தில் அவர்­களை உயர்ந்த இடத்­தில் வைத்துப்­பார்க்­கும் அள­வுக்கு தன் னி­றைவு பெற்­ற­வர்­க­ளாக அவர்­களை ஆக்­கி­ய­தில் முக்­கி­யப் பங்கு வகிப்­பது தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யி­லான திரா­விட மாடல் அர­சு­தான். வாழ்க்­கை­யின் எல்லா தளங்­க­ளி­லும் பெண்­களை இப்­படி உயர்த்தி வைத்­துப் பார்க்­கும் திரா­விட மாடல் அரசு ஒட்­டு­மொத்த இந்­தி­யா வுக்­கும் வழி­காட்­டி­யாக, முன்­னோ­டி யா­கத் திகழ்­கி­றது என்­பதை நான் பெரு­மை­யோடு சொல்­வேன். பெண்கள் முன்­னேற்­றம் என்­பது இப்படி இருக்க வேண்­டுமே தவிர, இந்த பி.ஜே.பி அரசு இப்­போது கொண்­டு­வந்­தி­ருக்­கிற மக­ளிர் இட­ ஒ­துக்­கீடு மசோ­தா­போல வேண்டா வெறுப்­பாக இருக்­கக் கூடாது. இந்த மசோதா இரு அவை­க­ளி­லும் இப்­போது நிறை­வேறி விட்­டா­லும் கூட இதன் பயனை அடைய இந்த நாட்­டுப் பெண்­கள் இன்­னும் குறைந்­தது அய்ந்­தாண்­டு­ கா­லம் காத்­தி­ருக்க வேண்­டிய அவல நிலை­தான் நீடிக் கி­றது. இதற்கு மக்­கள் தொகை­க­ணக் கெடுப்­பும் அத­ன­டிப்­ப­டை­யி­லான தொகுதி மறு சீர­மைப்­பும்­த­டைக் கற்களாக இருக்­கி­ன்றன. அதனால் ­தான் இந்த மசோ­தாவை பல ஆண்­டு ­க­ளுக்கு முன்பே இந்த அரசு கொண்டு­ வந்து நிறை­வேற்­றியி­ருக்க வேண்­டும் என்று விரும்­பி­னோம். ஆனால் எங் க­ளது ‘இந்­தியா’ கூட்­ட­ணி­யின் வலு வான கட்­ட­மைப்பு பி.ஜே.பி.யின­ருக்கு ஒரு­வித பயத்தை ஏற்­ப­டுத்­தி­யதால் ­தான் அவ­ச­ர­க­தி­யில் இதைக் கொண்டு­ வந்து நிறை­வேற்­றியி­ருக்­கி­றார்­கள்.திரு­மண நிச்­ச­ய­தார்த்­தத்தை நடத்தி முடித்­திருக்­கி­றீர்­கள். திரு­ம­ணம் எப்போது என்­று­தான் தெரி­ய­வில்லை.

ஆனால் இந்த பி.ஜே.பி. அர­சின் உள்­நோக்­கம் கலந்த திட்­டங்­களை மக்­கள் நன்­றா­கப் புரிந்து வைத்­தி­ருக்­கி­றார்­கள். எவ­ருக்­கும் முழு­ம­ன­தோடு நல்­லது செய்ய நினைக்­காத இந்த அர­சுக்கு வரும் தேர்­த­லில் தகுந்த பாடத்தை அவர்­கள் புகட்­டு­வார்­கள். இவ்­வாறு கனி­மொ­ழி ­என்.வி.என். சோமு பேசி­னார்.


No comments:

Post a Comment