தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்க அரசு ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 29, 2023

தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்க அரசு ஏற்பாடு

சென்னை,செப்.29- தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் விடுத்துள்ள   சுற்றறிக்கையில், திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 1076 கிலோமீட்டர் தூரத் திலும் 1 கோடி பனை விதை விதைக்கப்பட வுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பணி பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்று சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணி திட்டம் ஆகிய அமைப்புகளுடன் தமிழ் நாடு அரசு வழிகாட்டுதலுடன் நடத்தப் படவுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த, பனை விதைகள் விதைக்கும் பணியில், அதிக அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்க வேண்டுமெனவும், 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் பெற் றோர்களின் அனுமதி கடிதங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். மாணவர்கள் பனை விதைகளை சேகரித்தல் மற்றும் நடவு செய்தல் போன்ற சேவைகளை மேற் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அனுமதி கடிதங்களை  udhavi.app/panai என்ற இணையதளத்தில் கல்லூரி பெயருடன் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தபட்டுள்ளது.

No comments:

Post a Comment