புதுடில்லி, செப். 10 - இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. வங்கிகளுக்கு இடையேயான வெளிநாட்டுச் செலாவணியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு, செப்டம்பர் 6 அன்று 83 ரூபாய் 02 காசுகளாகத் தொ டங்கியது. வர்த்தக நேர முடிவில் 83 ரூபாய் 14 காசுகளாக சரிந்தது. இது 7.9.2023 அன்று மேலும் சரிந்து 83 ரூபாய் 21 காசுகள் என்று இறங்கியது.
இதற்கு முன்பு, 2022 அக்டோபரில், 83 ரூபாய் 29 காசுகள் என்ற அளவிற்கு மோசமான சரிவை ரூபாய் மதிப்பு சந்தித்து இருந் தது. தற்போது அதனையொட்டி 83 ரூபாய் 21 காசுகள் என்ற அளவிற்கு இறங்கியுள்ளது. இதன்மூலம் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மொத்தம் 36 காசுகள் மதிப்பு குறைந்துள்ளது. அதேநேரம் அமெரிக்க டாலர் மதிப்பு கடந்த ஆறு மாதங்களில் இல் லாத அளவுக்கு 104.90 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment