பட்னா, செப். 27 பாட்னா மாவட்டம், மோசிம்பூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் பிரமோத். அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த தலித் தொழிலாளி ஒருவர் ரூ.1,500 கடன் வாங் கியிருந்தார்.
அவர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. கடன் வாங் கிய தொழிலாளியின் மனைவி கடந்த 23 ஆம் தேதி இரவு குடிநீர் பிடிப்பதற்காகக் குடத் துடன் பொது குழாயடிக்குச் சென்றார். அப்போது பிர மோத்தும், அவரது கூட்டாளி களும் தொழிலாளியின் மனை வியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, கடன் மற்றும் வட்டிப் பணத்தை தருமாறு மிரட்டினர்.
அவர் பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திர மடைந்து அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து, அடித்து உதைத்து சித்திர வதை செய்தனர். பிரமோத் தின் மகன் அன்சூ குமார், பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழித்தார். உயிரைக் காப்பாற்ற அந்தப் பெண் ஆடையில்லா மலேயே வீட்டுக்குத் தப்பி யோடி வந்துவிட்டார்.
தனக்கு நேர்ந்த கொடு மையை கணவர், உறவினர் களிடம் அவர் கண்ணீர் மல்கக் கூறினார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை அதிகாரி ஜிதேந்திர சிங் கங்குவார் கூறும்போது, “இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து பிரமோத் குமார், அவரது மகன் அன்சூ குமார் உள்பட 6 பேரை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், ரூ1,500 கடனை கொடுத்து விட்டதாக வும், அதன்பிறகும் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக வும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment